ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 134

19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

இந்த சுலோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:

இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

176. ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த 

த்யுதிர் ஒளி 

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும் 

ச அஸ்யேதி உடையவராதலால் 

மஹாத்யுதி: பகவான் 'மஹாத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் 'மஹாத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

'ஜ்யோதிஶாம் ஜ்யோதி:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

177. ஓம் அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததிதி இவ்வாறானது, இத்தகையது 

நிர்தேஶ்டும் தீர்மானிக்க 

யன் ந ஶக்யதே இயலாத 

பரஸ்மை மிக உயர்ந்த 

ஸ்வஸம்வேத்யத்வாத் அறிந்து கொள்ள முடியாத 

அநிர்தேஶ்யம் 'அநிர்தேஶ்யம்' என்று அழைப்பர் 

வபுரஸ்யேதி (அத்தகைய) திருமேனியைக் கொண்டவராதலால் 

அநிர்தேஶ்யவபு: பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்தகையது என்று தீர்மானிக்க இயலாத, நம்மால் அறிந்துகொள்ள முடியாது உயர்ந்த வஸ்துவிற்கு 'அநிர்தேஶ்யம்' என்று பெயர். அத்தகைய, (நம்மால் அறிந்துகொள்ள இயலாத) திருமேனியைக் கொண்டவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வபு: என்றால் திருமேனி (உடல்) என்று பொருள்.  உதாரணமாக, இரணியன் தனக்கு எவ்வாறெல்லாம் மரணம் வரக்கூடாது என்று சிந்தித்து பல வரங்களை கேட்டுப் பெற்றான். ஆயினும், அந்த வரங்களுக்கு பங்கம் வராதவண்ணம், நரம் கலந்த சிங்க உருவாக பகவான் அவதரித்து அவனை வதைத்தார். அவரது உருவம் (அதற்கு முன்பு வரை) சாதாரண புலன்களால் உணர்ந்து அறியாத ஒன்றாக இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக