ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 135

 19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |

அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||

இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||

இந்த சுலோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:

178. ஓம் ஸ்ரீமதே நம:

ஐஸ்வர்யலக்ஷணா செல்வங்களின் வடிவான 

ஸமக்ரா அனைத்து 

ஸ்ரீர் திருமகள் 

யஸ்ய எவரிடம் (வசிக்கிறாளோ

: அவர் (பகவான்

ஸ்ரீமான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீமான்' (திருவுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் இருப்பதால் அவர் 'ஸ்ரீமான்' என்று விளக்கியிருந்தார் ஆச்சார்யர். இங்கு, அனைத்து செல்வங்களுடன் திருமகள் அவருடன் இருப்பதால் 'ஸ்ரீமான்'. அங்கு வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமாய் கூறப்பட்டது. இங்கோ, செல்வங்களுடன் உறைதல் பிரதானமாய் கூறப்பட்டுள்ளது.

179. ஓம் அமேயாத்மனே நம:

ஸர்வை: அனைத்து 

ப்ராணிபிர் ஜீவராசிகளாலும் 

அமேயா அளவிடமுடியாத 

புத்திராத்மா ஞானம் (புத்தி), மற்றும் தன்மை (ஆத்மா

யஸ்ய ஸ எவரிடம் உள்ளதோ (பகவானிடம் உள்ளதால்

அமேயாத்மா அவர் (பகவான்) 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஞானத்தையும், தன்மையையும் யாராலும் அளவிட முடியாது. எனவே, அவர் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் ஞானமும் தன்மையும் அனைத்து ஜீவராசிகளைக்காட்டிலும் உயர்ந்ததாக, அளவிட முடியாததாக இருப்பதாலும் அவர் 'அமேயாத்மா'.

180. ஓம் மஹாத்ரித்ருஶே நம:

மஹாந்தம் மிகப் பெரிய அத்ரிம் கிரிம் மலைகளை ('அத்ரி' என்றால் மலை என்று பொருள்) மந்தரம் மந்தர மலை கோவர்த்தனம் ச கோவர்த்தன மலை அம்ருதமதனே பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுதும் கோரக்ஷணே ச ஆநிரைகளைக் காத்த பொழுதும் த்ருத்வான் இதி தாங்கிய படியால் மஹாத்ரித்ருக் பகவான் 'மஹாத்ரித்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் ஶாந்தோயம் இங்கு 'மஹாத்ருத்ருஶ்' என்ற சொல் 'மஹாத்ரித்ருக்' என்று மருவியுள்ளது. பாற்கடலில் அமுதம் கடைந்த பொழுது மந்தர மலை, ஆநிரைகளைக் காத்த பொழுது கோவர்தனம் ஆகிய மிகப்பெரிய மலைகளைத் தாங்கியவரானதால் பகவான் 'மஹாத்ரித்ருக்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மந்தர மலையைத் தாங்கியது: துர்வாசரின் சாபத்தால் முதுமையை அடைந்த தேவர்கள், பகவானின் ஆணைப்படி அஸுரர்களுடன் சேர்ந்து, மந்தர மலையை தூணாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது, மந்தர மலை பாற்கடலுக்குள் அழுந்தியது. தேவர்களின் வேண்டுதலை ஏற்ற பகவான் லக்ஷம் யோஜனை ஓடுள்ள ஒரு கூர்மமாக (ஆமையாக) அவதரித்து மந்தர மலையைத் தாங்கினார். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 8-வது ஸ்கந்தம் 7வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 1வது அம்சம் 9வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆநிரைக் காத்தது: பகவான், இந்திரனின் அகந்தையை அடக்க, ஆயர்கள் அவனுக்கு செய்யும் வேள்வியைத் தடுத்து நிறுத்தினார். கோபம் கொண்ட இந்திரன் ப்ருந்தாவனத்தின் மீது 7 நாட்கள் விடாமல் மழை பொழிந்தான். இதனால் துன்பமடைந்த ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க பகவான் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் 7 நாட்கள் தாங்கினார். தன் கர்வம் தொலைந்த இந்திரன் பகவானைப் பணிந்து, அவரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் ஸ்வர்கத்தை அடைந்தான். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 10-வது ஸ்கந்தம் 24 மற்றும் 25வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 5வது அம்சம் 11, 12வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக