செவ்வாய், ஜூன் 08, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 182

35. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ: |

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

318. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |

323. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்: 

318. ஓம் அச்யுதாய நம:

ஶட்பாவவிகாரரஹிதத்வாத் பகவான் ஆறு வகையான மாறுதல்களற்றவர் 

அச்யுத: எனவே, அவர் 'அச்யுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறுவகையான மாறுதல்களற்றவர் (அஸ்தி - உண்டாதல், ஜாயதே - பிறத்தல், வர்த்ததே - வளர்தல், பரிணமதே - வளர்தலின் முடிவை அடைதல், அபக்ஷீயதே - தேய்தல், நஶ்யதி - அழிதல்). எனவே அவர் 'அச்யுத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்' (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பு 100-வது திருநாமத்தில் (அச்யுத:) ஆசார்யாள் "பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை" என்று உரை அளித்திருந்தார்.


319. ஓம் ப்ரதிதாய நம:

ஜகதுத்பத்யாதிகர்மபி: இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் முதலிய செயல்களால் 

ப்ரக்யாத: புகழ்பெற்று விளங்குபவர் 

ப்ரதித: எனவே, அவர் 'ப்ரதித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் (காத்தல் மற்றும் அழித்தல்) முதலிய செயல்களால் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். எனவே, அவர் 'ப்ரதித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


320. ஓம் ப்ராணாய நம:

ஸூத்ராத்மனா இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக (மாலைகளில் மணியைக் கோர்க்கும் ஸூத்ரம் போல) 

ப்ரஜா: உயிரினங்களுக்கு 

ப்ராணயதீதி உயிரை (ப்ராணனை) அளிப்பதால் 

ப்ராண: பகவான் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக, அனைத்து ஜீவராசிகளுக்கும் (உயிரினங்களுக்கும்) உயிர் அளிப்பவராக உள்ளார். எனவே, அவர் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ராணோ வா அஹமஸ்மி'

நானே ப்ராணனாக இருக்கிறேன்.

இதி பஹ்வ்ருசா | இது பஹ்வ்ருச ஶ்ருதியின் கூற்றாகும்.

முன்பு, 66-வது திருநாமத்தில் ஆச்சார்யாள் "பகவான் அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்கிறார்" என்று விளக்கமளித்திருந்தார்.

321. ஓம் ப்ராணதாய நம:

ஸுராணாமஸுராணாம் தேவர்கள் (ஸுரர்கள்) மற்றும் அசுரர்களின் 

ப்ராணம் பலம் 'ப்ராணன்' அதாவது பலத்தை 

ததாதி தருகிறார் (தேவர்களுக்கு) 

த்யதி வேதி குறைக்கிறார் (அசுரர்களுக்கு) 

ப்ராணத: எனவே, பகவான் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கு ப்ராணனை (பலத்தை) அளிக்கிறார், அசுரர்களுக்கு ப்ராணனை (பலத்தை) கெடுக்கிறார். எனவே, அவர் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 65-வது திருநாமத்தில் ஆசார்யாள் "அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்" என்று விளக்கியிருந்தார்.

த: என்ற சொல்லிற்கு ததாதி - தருதல், த்யதி - வெட்டுதல் முதலிய பல பொருட்கள் உள்ளன. இங்கு ஆசார்யாள் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றிணைத்து இங்கு உரை அளித்துள்ளார். தேவர்களுக்கு பலத்தை அளிக்கும் அவரே, அசுரர்களின் பலத்தை குறைக்கிறார். பாற்கடலைக் கடையும் பொழுது அசுரர்களை வாசுகியின் தலைப்பாகத்தை இழுக்கச் செய்து அவர்களின் பலத்தை குறைத்தார். தேவர்களின் பக்கலில் மழையைப் பொழியச்செய்து அவர்களின் சோர்வை நீக்கி பலத்தைப் பெருகச்செய்தார்.


322. ஓம் வாஸவானுஜாய நம:

அதித்யாம் கஶ்யபாத் அதிதிக்கும் காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக 

வாஸவஸ்யானுஜோ வாஸவனான இந்திரனின் தம்பியாக (வாமனனாக) 

ஜாத இதி பிறந்தததனால் 

வாஸவானுஜ: பகவான் 'வாஸவானுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அதிதிக்கும், காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக இந்திரனின் தம்பியாக (வாமனனாக) அவதரித்தார். எனவே, அவர் 'வாஸவானுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

323. ஓம் அபாம்நிதயே நம:

ஆபோ தண்ணீரானது 

யத்ர எங்கு 

நிதீயந்தே ஸ: நிறைந்திருக்குமோ 

அபாம்நிதி: அந்த சமுத்திரத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் 'அபாம்நிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தண்ணீரால் நிறைந்திருப்பதால் கடலானது 'அபாம்நிதி:' என்று அழைக்கப்படுகிறது. அந்த கடலும் பரப்ரஹ்மத்தின் ஒரு வடிவேயாகும். எனவே, பகவான் 'அபாம்நிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸரஸாமஸ்மி ஸாகர:' (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

 

324. ஓம் அதிஶ்டானாய நம:

அதிதிஶ்டந்தி நிலைபெற்றிருக்கின்றன 

பூதானி அனைத்து உயிரினங்களும் 

உபாதான காரணத்வேன மூலப்பொருளாய் இருப்பதால் 

ப்ரஹ்மேதி பரப்ரஹ்மமான பகவானிடத்தில் 

அதிஶ்டானம் எனவே, பகவான் 'அதிஶ்டானம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதால், அனைத்துமே பகவானிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. எனவே அவர் 'அதிஶ்டானம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'மத்ஸ்தானி ஸர்வபூதானி' (ஸ்ரீமத் பகவத் கீதை 9.4)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைப்பெற்றன

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அதிஶ்டானம் என்றால் ஆதாரம் அல்லது வசிக்கும் இடம் என்று பொருள். பகவானிடமிருந்தே நாம் அனைவரும் தோன்றுகிறோம். அவரே நமது மூலப்பொருளாவார். எனவே, அவர் அனைத்திற்கும் அதிஶ்டானமாய் இருக்கிறார்.

 

325. ஓம் அப்ரமத்தாய நம:

அதிகாரிப்ய: அந்தந்த அதிகாரிகளை (செயல் புரிபவர்களை) 

கர்மானுரூபம் அவரவரது வினைகளுக்கேற்ப 

ஃபலம் ப்ரயச்சன் உரிய பலன்களை வழங்குகிறார் 

ந ப்ரமாத்யதீதி அதனின்று (உரிய பலன்களை வழங்குவதிலிருந்து) ஒரு பொழுதும் தவறுவதில்லை 

அப்ரமத்த: எனவே பகவான் 'அப்ரமத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் ஒவ்வொரு அதிகாரிக்கும் (செயல் புரிபவருக்கும்) அவரவரது வினைகளுக்கேற்ப உரிய பலன்களை வழங்குவதிலிருந்து ஒரு பொழுதும் தவறுவதில்லை. எனவே, அவர் 'அப்ரமத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அப்ரமத்த என்றால் கவனத்துடன் இருப்பவர் (அல்லது கவனக்குறை ஏதுமில்லாதவர்) என்று பொருள். பகவான் வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று பொருள்.

 

326. ஓம் ப்ரதிஶ்டிதாய நம:

ஸ்வே தன்னுடைய 

மஹிம்னி மகிமையிலேயே 

ஸ்தித: நிலைபெற்றுள்ளார் (தன்னுடைய மகிமையினாலேயே புகழ் பெற்றுள்ளார்) 

ப்ரதிஶ்டித: எனவே அவர் 'ப்ரதிஶ்டித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய மஹிமையிலேயே நிலைபெற்றுள்ளார் (அனைத்திற்கும் ஆதாரமான அவருக்கு வேறு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் தேவையில்லை. தானே தனக்கு ஆதாரமாய் இருக்கிறார்). எனவே, அவர் 'ப்ரதிஶ்டித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஶ்டித: இதி ஸ்வே மஹிம்னி' (சாந்தோக்ய உபநிஶத் 7.28.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) எதில் நிலைபெற்றுள்ளார். தன்னுடைய புகழில் (மஹிமையில்)

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக