செவ்வாய், ஜூன் 01, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 179

32. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்தகாமகாமப்ரதப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

290. பூதபவ்யபவன்னாத:, 291. பவன:, 292. பாவன:, 293. அனல: |

294. காமஹா, 295. காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

290. ஓம் பூதபவ்யபவன்னாதாய நம:

பூதபவ்யபவதாம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் (ஆகிய முக்காலங்களிலும்

பூதக்ராமாணாம் உயிர்த்தொகுதிகளுக்கு 

நாத: எஜமானனாய் இருக்கிறார் 

தைர்யாச்யதே அவர்களால் வணங்கப்படுகிறார் (அர்ச்சிக்கப்படுகிறார்

தானுபதபதி (நல்வழியில் அவர்கள் நடவாதபொழுது) அவர்களை அல்லலுக்கு உட்படுத்துகிறார் 

தேஶாமீஶ்டே ஶாஶதீதி வா அவர்களை ஆணையிட்டு ஆள்கிறார் 

பூதபவ்யபவன்னாத: எனவே, பகவான் 'பூதபவ்யபவன்னாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்காலங்களிலுமுள்ள உயிர்த்தொகுதிகளால் (உயிரினங்களால்) வணங்கப்படுகிறார். தவறான வழியில் நடக்கும் பொழுது அல்லல்களுக்கு உட்படுத்துகிறார். அனைவருக்கும் எஜமானனாய் ஆணையிட்டு ஆள்கிறார். எனவே, அவர் 'பூதபவ்யபவன்னாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

291. ஓம் பவனாய நம:

பவத தூய்மையாக்குகிறார் 

இதி எனவே 

பவன: பகவான் 'பவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் தூய்மையாக்குகிறார். எனவே பகவான் 'பவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 'பவன: பவதாமஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்

 இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

 292. ஓம் பாவனாய நம:

பாவயதீதி அனைவரையும் செலுத்துகிறார் 

பாவன: எனவே, பகவான் 'பாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் செலுத்துவதால் (காற்றையும் வீசும்படி செய்வதால்) பகவான் 'பாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பீஷாஸ்மாத்வாத: பவதே (தைத்ரிய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது, 

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

293. ஓம் அனலாய நம:

அனான் ப்ராணான் 'அன' என்றால் ப்ராணனை (மூச்சுக்காற்றைக்) குறிக்கும் 

ஆத்மவத்வேன லாதீதி உள்ளுறை ஆத்மாவாக அதை உள்ளிழுப்பதால் 

ஜீவ: ஜீவாத்மாவை 

அனல: 'அனல' என்று அழைப்பார்கள். (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல என்பதால்) பகவான் 'அனல' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஜீவாத்மாவின் வடிவில் மூச்சுக்காற்றை (ப்ராணனை) உள்ளிழுக்கிறார் (அனைவரையும் வாழவைக்கிறார்). எனவே, அவர் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. ஆச்சார்யாள் இதை முன்னுரை பகுதியில் பல ஶ்ருதி, ஸ்ம்ரிதி, புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி விரிவாக விளக்கியுள்ளார்.

னலதேர் கந்தவாசினோ 'னல' என்றால் மணத்தைக் குறிக்கும் 

'நஞ்'பூர்வாத்வா அதற்கு எதிர்மறையாய் ('' என்ற சொல் சேர்வதன் மூலம்

அனல: பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'னல' என்றால் மணத்தைக் (வாசனை) குறிக்கும். எவ்வித மணமும் அற்றவர் என்பதால் பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எதிர்மறைப் பொருளைக் குறிக்க 'னல'த்தின் முன் '' சேர்ந்து, 'அனல:' என்று உருவாகிறது.

அகந்தம் அரசம் (பரப்ரஹ்மம்) மணமற்றது, சுவையற்றது., 

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

பரப்ரஹ்மத்தை சுவைத்தோ, முகர்ந்தோ உணர இயலாது என்பதே இதன் உட்பொருளாகும்.

ந அலம் பர்யாப்தமஸ்ய வித்யத இதி வா அவருக்கு முடிவு, எல்லைநிலம் என்பதே கிடையாது (அலம், பர்யாப்தம் என்றால் முடிவு என்று பொருள்

அனல: எனவே பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு முடிவோ, எல்லை என்பதோ கிடையாது. எனவே, அவர் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

294. ஓம் காமக்னே நம:

காமான் ஹந்தி அனைத்து ஆசைகளையும் வேரறுக்கிறார் 

முமுக்ஷூணாம் முக்தியை விழைவோருக்கும் 

பக்தானாம் பக்தர்களுக்கும் 

ஹிம்ஸகானாம் துன்பங்களைத் தரவல்ல (எதிரியான

சேதி காமஹா எனவே, பகவான் 'காமஹா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பக்தர்கள், மற்றும் முக்தியை விழைவோர்களுக்கு, அவர்களுக்குத் தடங்கலாய், எதிரியாய் உள்ள காமங்களை (ஆசைகளை) வேரறுக்கிறார். எனவே, பகவான் 'காமஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

295. ஓம் காமக்ருதே நம:

ஸாத்விகானாம் ஸத்வ குணமுடையோரின் 

காமான் (நியாயமான) ஆசைகளை 

கரோதீதி நிறைவேற்றுகிறார் (பூர்த்தி செய்கிறார்

காமக்ருத் எனவே, பகவான் 'காமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பக்தர்களின் முன்னேற்றப் பாதைக்கு இடையூறாய் இருக்கும் ஆசைகளை வேரறுக்கும் அந்த பகவானே) ஸத்வ குணமுடையோரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுகிறார். எனவே, (காமஹந்தாவான) பகவான் 'காமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காம: ப்ரத்யும்ன: காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை 

தஸ்ய ஜனகத்வாத்வா பிறப்பித்த தந்தையாதலால் 

காமக்ருத் பகவான் 'காமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை பிறப்பித்த தந்தையாதலால் பகவான் 'காமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காமனின் மறு அவதாரம்: மன்மதன் (காமன்), தேவர்களுக்காக, சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் வெகுண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அவ்வாறு எரிந்த காமன், பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்த பொழுது அவருக்கும், ருக்மிணிக்கும் மகனாகப் (ப்ரத்யும்னனாகப்) பிறந்தான். அவனால் தனக்கு மரணமேற்படும் என்றறிந்த ஸம்பராஸுரன் என்ற அஸுரன் ப்ரத்யும்னனை அவன் பத்து நாள் குழந்தையாக இருந்த பொழுதே துவாரகையிலிருந்து தூக்கி சென்றான். அங்கு, மாயாவதி (அதாவது முற்பிறப்பில் மன்மதனின் மனைவி ரதி) என்னும் தனது பணிப்பெண்ணிடம் அக்குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்தான். அக்குழந்தையைப் பார்த்ததும் தன் முற்பிறப்பு நினைவு பெற்ற மாயாவதி அக்குழந்தையை வளர்த்தாள். தக்க வயதடைந்ததும் ப்ரத்யும்னனைக் கொண்டு ஸம்பராஸுரனை வதம் செய்வித்து, பின்னர் ப்ரத்யும்னனையே மணந்தாள் மாயாவதி. அனைவரும் பின்னர் துவாரகைக்குத் திரும்பினர். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் 55-வது அத்தியாயத்தில் விரிவாக .கூறப்பட்டுள்ளது.

 கடுவினைக் களையலாகும் காமனைப் பயந்த காளை

இடவகைக் கொண்டதென்பர் எழிலணி அனந்தபுரம் (திருவாய்மொழி 10.2.7)

296. ஓம் காந்தாய நம:

அபிரூப அழகிய வடிவு படைத்தோருக்குள் 

தம: மிகச்சிறந்தவராதலால் 

காந்த: பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரழகு படைத்தோர் பலர். அவர்கள் அனைவரைக் காட்டிலும் சிறந்த பேரழகு கொண்டவராதலால் பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

297. ஓம் காமாய நம:

காம்யதே விரும்பப்படுகிறார் 

புருஶார்த்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை 

அபிகாங்க்ஷிபிர் (அடைய) விரும்போவோராலும் 

இதி எனவே 

காம: பகவான் 'காம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை அடைய விரும்புவோராலும் (அவற்றை வழங்கக்கூடியவர் பகவான் ஒருவரே என்பதால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் 'காம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

298. ஓம் காமப்ரதாய நம:

பக்தேப்ய: தன் அடியவர்களின் 

காமான் (நியாயமான) ஆசைகளை 

ப்ரகர்ஶேண அவர்கள் விரும்பியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில் 

ததாதீதி வழங்குவதால் 

காமப்ரத: பகவான் 'காமப்ரத:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் நியாயமான விருப்பங்களை, அவர்கள் வேண்டியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில், பகவான் நிறைவேற்றுகிறார். எனவே, அவர் 'காமப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

299. ஓம் ப்ரபவே நம:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்தவராய் 

பவனாத் இருப்பதால் 

ப்ரபு: பகவான் 'ப்ரபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராய் (சிறந்த தேவனாய்) இருப்பதால் பகவான் 'ப்ரபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக