ஸம்ஸார ஸர்ப்ப கன வக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்டிராகரால விஷதக்த விநஷ்ட மூர்த்தே |
நாகாரி வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (7)
ஸம்ஸார - இந்தப் பிறவி, ஸர்ப்ப - அரவம் (பாம்பு), கன - பெரிய, வக்த்ர - வாய், பயோக்ர - மிகுந்த அச்சத்தை விளைவிக்கக் கூடிய, தீவ்ர - கூரிய, தம்ஷ்டிராகரால - பெரிய பற்கள், விஷதக்த - நஞ்சு நிறைந்த, விநஷ்ட - துன்பமுற்ற, மூர்த்தே - வடிவமாய், நாகாரி - அரவங்களின் (பாம்புகளின்) எதிரியான கருடன், வாஹன - (கருடன்) மீதேறி வருவோரே, ஸுதாப்தி -பாற்கடலில், நிவாஸ - வாழும், சௌரே - சௌர எனும் பெயர் பெற்ற, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.
இந்தப் பிறவி கூறிய நஞ்சு நிறைந்த பற்களை உடைய ஒரு அரவமாகும் (பாம்பாகும்). இந்தப் பிறவியென்னும் அரவம் என்னைத் தன் நச்சுப் பற்களால் தீண்டித் துன்புறுத்துகிறது. (பாம்புகளின் எதிரியான) கருடன் மீதேறி வருபவரே!!! பாற்கடலில் வாழும் சௌரியே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

ஆதிசங்கரர் இந்த துதியில், இந்தப் பிறவியை ஒரு கொடிய அரவமாக (பாம்பாக) உருவகப் படுத்துகிறார். இந்தப் பிறவியை அடைந்த அனைவரும் இருத்தல், பிறத்தல், வளர்த்தல், வளர்ச்சி நிறைவுறுதல், தேய்தல் மற்றும் இறத்தலாகிய ஆறுவகைத் துன்பங்களுக்கு மீண்டும், மீண்டும் உட்படுத்தப்படுகிறோம். இந்தப் பிறவித் துன்பத்தை, நஞ்சு நிறைந்த கூறிய பற்களுடனும், அச்சமூட்டும் பெரிய வாயுடனும் கூடிய (பிறவியென்னும்) அரவம் தீண்டியதால் ஏற்படும் துன்பத்தோடு ஒப்புமை கூறுகிறார்.
அரவத்தினால் துன்பமுறும் நம்மை அந்த அரவங்களின் பகைவனான கருடன் மீதேறி வந்து நம்மைக் காக்கவேண்டும் என்று பகவானை வேண்டுகிறார். கருடனைக் கண்டவுடனே அரவங்கள் ஓடிவிடுவது இயற்கையல்லவா? அவ்வாறே, கருடன் மீதேறி வரும் லக்ஷ்மிநரசிம்மரைக் கண்டதும் இந்தப் பிறவியெனும் அரவமும் நம்மை விட்டு ஓடிவிடும்.
அரவம் ஓடிவிட்டாலும் அதனால் தீண்டப்பட்டு துன்புற்றிருக்கிறோமே, அதற்கு மருந்து உண்டா? பரமனின் திருப்பார்வையே அந்தப் பாற்கடலின் அமுதம் போன்றது. அதுவே இந்தப் பிறவியென்னும் பாம்பு தீண்டியதற்கான மருந்து. எனவே தான், பகவான் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறார்.
அந்த பகவான் எப்பேர்பட்டவரெனில், இவ்வாறு துன்பமடைந்திருப்போரைக் காப்பதில் வல்லவர் (சூரர்). எனவே, சௌரி என்று பெயர் பெற்றவர். அந்த திருமாமகள் கேள்வன், லக்ஷ்மிநரசிம்மன் தன்னைக் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டுகிறார்.
சௌரி என்னும் சொல் 'சூர' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. சௌரி என்றால் சூரன், சூரத்தன்மை உடையவன் என்று பொருள். துன்பத்திலிருப்போரைக் காப்பதில் சூரன் பகவான்.
பகவான் ப்ரஹலாதனையும், மீராவையும் நஞ்சிலிருந்து காத்தது:
பக்தர்களில் உத்தமர்களான ப்ரஹலாதனுக்கும், மீராவிற்கும் அவர்களைக் கொல்லும் பொருட்டு அவர்களின் உறவினர்களே உணவில் நஞ்சைக் கலந்து அளித்தனர். அந்த உணவை பகவானுக்கு நிவேதனம் செய்த பின் அவர்கள் உண்டனர். பகவான், தனது அடியவர்களை அந்த நஞ்சிலிருந்துக் காத்தான்.
குருவாயூர் தல வரலாற்றிலிருந்து:

ஒரு அரசனுக்கு அவனது ஜாதகத்தின்படி மரண கண்டம் நெருங்கியது. அவனது, குலகுருவின் அறிவுரைப்படி அன்றைய தினம் முழுவதும் குருவாயூர் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண த்யானத்தில் ஆழ்ந்தான். அன்றைய தினம் முடிந்ததும், தனக்கு கண்டம் ஏதும் நிகழவில்லையே என்று தன் குருவிடம் கேட்க, அதற்கு அவர் அவனது கால்களைக் காட்டினார். அங்கு, பாம்பு தீண்டிய வடு இருந்தது. அவனது குலகுரு 'அந்த அரசனின் ஜாதகப்படி அவனை அரவம் தீண்டியது என்றும், குருவாயூரப்பனின் அருளால் அவனுக்கு ஒன்றும் நேரவில்லை' என்பதையும் விளக்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக