ஞாயிறு, ஜூன் 03, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 56

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மூன்றாவது ஸ்லோகமும் அதிலுள்ள திருநாமங்களும் அவற்றின் பொருளும்.


3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |

நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||


18. யோக: 19. யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |

21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||


18. ஓம் யோகாய நம:
ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |
ஏகத்வபாவனா யோகாக்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||'
தத் அவாப்யதயா யோக: |

மனம்மற்றும் அறிவுப்புலன்களை அடக்கிஅவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும்இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால்பகவான் "யோக:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

19. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:
யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |

யோகத்தை கற்றுஆராய்ந்துஉள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்குஅவர்களின் நன்மைதீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் "யோகவிதாம் நேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

20. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும்ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் "ப்ரதானபுருஶேஶ்வர:என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

21. ஓம் நாரஸிம்ஹவபுஶே நம:
நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|

(நரசிம்ம அவதாரத்தின் பொழுதுஅவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் 'நாரஸிம்ஹவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22. ஓம் ஸ்ரீமதே நம:
யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் 'ஸ்ரீமான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

23. ஓம் கேவாய நம:
அபிரூபாகேஶா யஸ்ய  கே: |

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் 'கேசவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா கஸ்ச அஸ்ச ஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶே வர்தந்தே  கே: |

ப்ரஹ்மாவிஶ்ணுசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் 'கேசவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
1
கேஶிவதாத்வா கே: |

'கேசிஎன்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.


24. ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் உத்தமபுருஶோத்தம: |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'புருஶோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக