செவ்வாய், ஜூன் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 59

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

28. ஓம் ஸ்தாணவே நம:
ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.

(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

29. ஓம் பூதாதயே நம:
பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதிகாரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் பூதாதி:’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக