செவ்வாய், ஜூன் 05, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 57


4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

25. ஓம் ஸர்வஸ்மை நம:
அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹாபாரதம் உத்தியோக பர்வம் 7.11)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:
அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலைபெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ஸர்வ என்று அழைக்கின்றனர்.

இதி இந்த பகவத்வ்யாஸவசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் 'ஸர்வ' என்று அழைக்கப்படுகிறார் |

மஹாபாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின்படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் 'ஸர்வ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக