சனி, ஜூன் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 61

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

32. ஓம் பாவனாய நம:
ஸர்வேஶாம் அனைத்து போக்த்ருணாம் அனுபவிப்பவர்களுக்கு ஃபலானி (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை பாவயதீதி உருவாக்குவதால் பாவன: அவர் 'பாவன:' என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான் 'பாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வஃபலதாத்ருத்வம் பகவானே அனைத்துப் பலன்களையும் வழங்குகிறார் என்பது,

'ஃபலமத உபபத்தே:' (ப்ரஹ்ம ஸூத்ரம் 3.2.38)
அனைத்துப் பலன்களும் ப்ரஹ்மத்தினிடத்தினின்றே தோன்றுகின்றன.

இத்யத்ர ப்ரதிபாதிதம் இதனால் (மேற்கண்ட ப்ரஹ்ம ஸூத்ரத்தினால்) நிரூபிக்கப்பட்டுள்ளது.

33. ஓம் பர்த்ரே நம:
ப்ரபஞ்சஸ்ய இந்த ப்ரபஞ்சத்தை அதிஶ்டானத்வேன தனது சக்தியால் பரணாத் தாங்குவதால் பர்தா பகவான் 'பர்தா' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் 'பர்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக