வெள்ளி, ஜூன் 08, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 58

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

26. ஓம் ஶர்வாய நம:
ஶ்ருணாதி 'ஶ்ருணாதி' என்றால் ஸம்ஹாரஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலா: ப்ரஜா: அனைத்து உயிர்களையும் இதி 'ஶர்வ:' பகவான் 'ஶர்வ:' என்று அழைக்கப்படுகிறார்.

பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் 'ஶர்வ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

27. ஓம் ஶிவாய நம:
நிஸ்த்ரைகுண்யதயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் 'ஶிவ:' என்று அழைக்கப்படுகிறார்.

முக்குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு

'ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:' (கைவல்ய உபநிஶத் 8)
கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்...

இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா 'ஶிவ' ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |
கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கியுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக