ஞாயிறு, ஜூன் 17, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 60

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

30. ஓம் நிதயேSவ்யயாய நம:
ப்ரளயகாலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: 'நிதி:' என்று அழைக்கப்படுகிறார்.

'கர்மண்யதிகரணே ச' (பாணினி ஸூத்ரம் 3.3.93)
இதி கி ப்ரத்யய:
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு 'கி' விகுதி கூட்டப்பட்டுள்ளது.

ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே 'நிதி'யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப்படுத்திக் காட்டுகிறார்.

அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்த: நிதி என்று இதற்குப் பொருள்.

அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் "நிதி: அவ்யய:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

31. ஓம் ஸம்பவாய நம:
ஸ்வேச்சயா (கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் ஸமீசீனம் புகழோடு பவனமஸ்யேதி பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) ஸம்பவ: அவர் 'சம்பவ:' என்று அழைக்கப்படுகிறார்.

(நம்மைபோன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடு பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் 'ஸம்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே' (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

அத துஶ்டவிநாஶாய ஸாதூனாம் ரக்ஷணாய ச |
ஸ்வேச்சயா ஸம்பவாம்யேவம் கர்பதுக்கவிவர்ஜித: ||’
தீயன செய்வோரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும், நான் எனது விருப்பத்தின் படி கர்ப்பமும் அதைச்சார்ந்த துன்பங்களும் இன்றி பிறக்கிறேன்.
இதி | இவ்வாறு, பகவானின் மற்றொரு வாக்கும் உள்ளது.
மேற்கண்ட ஸ்லோகம் எந்த இதிஹாஸ, புராணத்தில் உள்ளது என்ற குறிப்பு இல்லை. ஆனால், இதன் பொருள் பகவத்கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒத்தே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக