திங்கள், அக்டோபர் 01, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 83

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |

ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64ஈஶான:, 65. ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

72. ஒம் மாதவாய நம:
மாயா: 'மா' என்ற சொல் ஶ்ரிய: மஹாலக்ஷ்மியைக் குறிக்கும் தவ: 'தவ' என்ற சொல் பதி: கணவனைக் குறிக்கும் மாதவ: பகவான் மஹாலக்ஷ்மியின் கணவராதலால் அவர் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'மா' என்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்) கணவராதலால் அவர் 'மாதவன்' என்று அழைக்கப்படுகிறார்.

மதுவித்யாவபோத்யத்வாத்வா மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் மாதவ: பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ள) மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மௌனாத்த்யானாஸ்ச யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:
மௌனத்தாலும் (கண்டவற்றைப் பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும், யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இதி வ்யாஸவசனாத்வா மாதவ: |
ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று அழைக்கப்படுகிறார்.

73. ஒம் மதுஸூதனாய நம:
மதுநாமானமஸுரம் மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை ஸூதிதவான் அழித்ததால் (வதம் செய்ததால்) இதி மதுஸூதன: பகவான் 'மதுஸூதனன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம் செய்ததால்) பகவான் 'மதுஸூதனன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கர்ணமிஶ்ரோத்பவம் சாபி மதுநாமமஹாஸுரம் |
ப்ரஹ்மணோபசித்திம் குர்வன் ஜகான புருஷோத்தம: ||
தஸ்ய தாத வதாதேவ தேவதானவமானவா:|
மதுஸூதன இத்யாஹுர் ரிஷயஸ்ச ஜனார்தனம் || (மஹாபாரதம்)
(பகவானின்) காதிலிருந்த அழுக்கிலிருந்து 'மது' என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய அஸுரன் தோன்றினான். (அவனால் பீடிக்கப்பட்ட) ப்ரஹ்மாவிற்கு அடைக்கலம் தந்த பகவான் அந்த அஸுரனைக் கொன்றொழித்தார். ஓ தந்தையே! அந்த வதத்தின் காரணத்தால் ஜனார்த்தனராகிய பகவானை தேவர்கள், அஸுரர்கள், மானிடர் மற்றும் முனிவர்கள் 'மதுஸூதனன்' என்ற பெயரினால் அழைத்தனர்.

இதி மஹாபாரதே |
இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக