சனி, அக்டோபர் 06, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 84

8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஶ்ட: ஶ்ரேஶ்ட: ப்ரஜாபதி: |

ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||

இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

64ஈஶான:, 65. ப்ராணத:66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள அனைத்துத் திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):

64ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத நியந்த்ருத்வாத் ஈஶான: 
அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

65ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான் ததாதி சேஷ்ட்யதீதி ப்ராணத:
அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி = ப்ராணத:

யத்வா, ப்ராணான் காலாத்மனா த்யதி கண்டயதீதி ப்ராணத:
அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + த்யதி = ப்ராணத:

ப்ராணான் தீபயதி ஷோதயதீதி வா ப்ராணத: 
அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + தீபயதி = ப்ராணத:

ப்ராணான் ததாதி லுனாதீதி வா ப்ராணத: 
அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:

66ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி ப்ராண: க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா | முக்யப்ராணோ வா |
அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.

67ஒம் ஜ்யேஶ்டாய நம:
வ்ருத்ததமோ ஜ்யேஶ்ட: 
அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் 'ஜ்யேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர்அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).

68ஒம் ஶ்ரேஶ்டாய நம:
ப்ரஶஸ்ய தமஶ்ரேஶ்ட: 
அனைவரைக்காட்டிலும் மேம்பட்டவராய்நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் 'ஶ்ரேஷ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

69ஒம் ப்ரஜாபதயே நம:
ஈஶ்வரத்வேன ஸர்வாஸாம் ப்ரஜானாம் பதி:
அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்).பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி). எனவேபகவான் 'ப்ரஜாபதிஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


70ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: ததாத்மா
அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறதுஅந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார்எனவே,பொதுவாக அவர் 'ஹிரண்யகர்ப்பர்என்று அழைக்கப்படுகிறார்பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார்.எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்பர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

71ஒம் பூகர்ப்பாய நம:
பூகர்ப்பே யஸ்ய ஸ பூகர்ப்ப: 
இந்த பூமியையும்ப்ரபஞ்சத்தையும்மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார்இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம்எனவே பகவான் 'பூகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


72ஒம் மாதவாய நம:
மாயா: ஶ்ரியதவபதிமாதவ: 
பகவான் 'மாஎன்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்கணவராதலால் அவர் 'மாதவன்என்று அழைக்கப்படுகிறார்.

மதுவித்யாவபோத்யத்வாத்வா மாதவ: 
(ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ளமது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் 'மாதவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மௌனாத்த்யானாஸ்ச யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |' (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)
இதி வ்யாஸவசனாத்வா மாதவ: |
மௌனத்தாலும் (கண்டவற்றைப் பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும்யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று அழைக்கப்படுகிறார்.


73ஒம் மதுஸூதனாய நம:
மதுநாமானமஸுரம் ஸூதிதவான் இதி மதுஸூதன:
மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம் செய்ததால்பகவான் 'மதுஸூதனன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக