ஞாயிறு, அக்டோபர் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 90


10.   ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||


இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

85. ஓம் ஸுரேஶாய நம:
ஸுரானாம் தேவானாம் ஸுரர்கள் என்றால் தேவர்கள் 
ஈஶ: அவர்களை ஆள்பவர் 
ஸுரேஶ: பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸூபபதோ வா (நன்மை என்ற பொருள்படும்) 'ஸு' என்ற பதத்தின் பின்னே 
ராதாது: (வழங்குதல் என்ற பொருள்படும்) 'ரா' என்ற விகுதி சேர்ந்து 
ஷோபனதாத்ருணாம் நன்மைகளைத் தருபவர்களுள் 
ஈஶ: தலைசிறந்தவர் 
ஸுரேஶ: (ஆதலால்) பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

86. ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் துன்புற்றிருப்போரின் 
ஆர்த்தி ஹரணத்வாத் துன்பங்களைத் தீர்ப்பதால் 
ஶரணம் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ஶரணம்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கர பகவத்பாதர் 'பக்தர்களின் துயர்களைக் களைபவர்' என்று கூறாது 'துன்புற்றோரின் துன்பங்களைக் களைபவர் என்று கூறியுள்ளார்'. இதன் தாத்பர்யம் என்னவெனில், பக்தர்களோ, அல்லவோ, பகவான் அனைவரது துயரங்களையும் களைகிறார். அனைவரின் துயரங்களையும் போக்கும் அவர், தன் அடியவர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்று நாமே சற்று சிந்தித்துப் பார்த்து, பகவானிடம் தூய பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக