சனி, அக்டோபர் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 89

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):

74ஓம் ஈஶ்வராய நம:
ஸர்வஶக்திமத்தயா ஈஶ்வர:
பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

75ஓம் விக்ரமிணே நம:
விக்ரம: ஸௌர்யம் தத்யோகாத் விக்ரமீ 
மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

76ஓம் தன்வினே நம:
தனுரஸ்யாஸ்தீதி தன்வீ   
(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

77ஓம் மேதாவினே நம:
மேதா பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் ஸா யஸ்யாஸ்தி ஸ மேதாவீ 
பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமைவல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

78ஓம் விக்ரமாய நம:
விசக்ரமே ஜகத் விஶ்வம் தேன விக்ரம:
ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா கருடேன பக்ஷினா க்ரமாத்வா விக்ரம: 
அல்லது, வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

79ஓம் க்ரமாய நம:
க்ரமனாத் க்ரமஹேதுத்வாத் வா க்ரம:
அனைத்து இடங்களிலும் செல்வதாலும்அனைவரும் செல்வதற்கு(இயங்குவதற்குதுணை புரிவதாலும்பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

80ஓம் அனுத்தமாய நம:
அவித்யமான உத்தமோ  யஸ்மாத் அனுத்தம:
அவரை விட மேலானவர் எவரும் இல்லைஎனவேபகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

81ஓம் துராதர்ஶாய நம:
தைத்யாதிபிர்தர்ஶயிதும் ந க்யத இதி துராதர்ஶ:
தர்ஶ என்றால் அடக்குதல்துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள்பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாதுஎனவேஅவர் 'துராதர்ஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

82ஓம் க்ருதக்ஞாய நம:
ப்ராணினாம் புண்யாபுண்யாத்மகம் கர்ம க்ருதம் ஜானாதீதி க்ருதக்ஞய 
பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார்எனவேபகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரபுஶ்பாத்யல்பமபி ப்ரயச்சதாம் மோக்ஷம் ததாதீதி வா க்ருதக்ஞய
(துளசி முதலியஇலைபூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாகமுக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

83ஓம் க்ருதயே நம:
புருஶப்ரயத்னக்ருதி: க்ரியா வாஸர்வாத்மகத்வாத் தத் ஆதாரதயா வா லக்ஷ்யதே க்ருத்யேதி வா க்ருதி: 
அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு 'க்ருதிஎன்று பொருள்.அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் 'க்ருதிஎன்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறதுஎனவேபகவான் 'க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

84ஓம் ஆத்மவதே நம:
ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் ஆத்மவான்
பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் 'ஆத்மவான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக