ஞாயிறு, அக்டோபர் 14, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 87

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

80. ஓம் அனுத்தமாய நம:
அவித்யமான அறியப்படவில்லை (காணவில்லை) உத்தமோ சிறந்தவர் யஸ்மாத் எவரைவிட : அவர் அனுத்தம: (அந்த பகவான்) ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை விட மேலானவர் எவரும் இல்லை; எனவே, பகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- இல்லை + உத்தம - மேலானவர் = அனுத்தம

யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அவரை விட வேறானதோ, மேலானதோ வேறொன்றும் இல்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோன்ய: (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)
ஸ்ரீமத் பகவத்கீதையில் (அர்ஜுனன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரைப் பார்த்து கூறியது): உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?

இதி ஸ்ம்ருதேஶ் | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை முதலிய) ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.

81. ஓம் துராதர்ஶாய நம:
தைத்யாதிபிர்தர்ஶயிதும் அசுரர்கள் முதலிய தீயோரால் ந க்யத இதி அடக்கமுடியாதவராக இருப்பதால் துராதர்ஶ: பகவான் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தர்ஶ என்றால் அடக்குதல். துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள். பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாது. எனவே, அவர் 'துராதர்ஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

82. ஓம் க்ருதக்ஞாய நம:
ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகளின் புண்யாபுண்யாத்மகம் கர்ம நல்ல (புண்ய) மற்றும் தீய (பாப, அபுண்ய) வினைகளை க்ருதம் செய்கின்ற ஜானாதீதி (உள்ளதை உள்ளபடி) அறிகின்றபடியால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார். எனவே, பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருத (செய்த நல், தீவினைகள்) + ஜானாதி = க்ருதக்ஞய

பத்ரபுஶ்பாத்யல்பமபி (துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை ப்ரயச்சதாம் (அவருக்கு) அர்ப்பணிப்போருக்கு மோக்ஷம் (அதற்கு ப்ரதியாக) முக்தியையே ததாதீதி வா தந்தருள்வதால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாக) முக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு க்ருதக்ஞய என்ற திருநாமத்திற்கு நன்றியுடையவர் என்று ஆதிசங்கரர் பொருள் உரைக்கிறார். எளிய பொருட்களை அவருக்கு அளித்தாலும், மிக்க நன்றியுடன் கிடைத்தற்கரிய முக்தியையே தந்தருள்கிறார் பகவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக