சனி, அக்டோபர் 13, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 86

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

77. ஓம் மேதாவினே நம:
மேதா ‘மேதா’ என்றால் பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை ஸா யஸ்யாஸ்தி ஸ பகவானிடம் இத்தகைய வல்லமை உள்ளதால் மேதாவீ பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஸ்மாயாமேதாஸ்ரஜோ வினி:' (பாணினி சூத்ரம் 5.2.121)
இந்தப் பாணினி ஸுத்ரத்தின்படி மேதா என்ற சொல்லுடன் வினி என்ற விகுதி சேர்ந்து ‘மேதாவீ’ என்றாகிறது.

பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை வல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

78. ஓம் விக்ரமாய நம:
விசக்ரமே தாவி (அளந்தார்) ஜகத் விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை (ஏழு உலகங்களையும்) தேன எனவே விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன், இந்த்ரனிடமிருந்து ஸுவர்க்கத்தை அபகரிக்க, பகவான் வாமனனாய்த் தோன்றி, மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அனைத்து உலகங்களையும் தாவி அளந்தார் என்பது பிரசித்தம். வாமனன் என்று அழைக்கப்பட்ட அவரே, தாவி அளந்தபின் த்ரிவிக்ரமன் என்று அழைக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

வினா கருடேன பக்ஷினா வினா என்றால் கருடப் பறவையைக் குறிக்கும் க்ரமாத்வா அதன் மீதேறி வருவதால் விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வி(வினா) + க்ரம(க்ரமாத்வா) = விக்ரம

79. ஓம் க்ரமாய நம:
க்ரமனாத் (இங்கும், அங்கும்) நடக்கிறார், செல்கிறார் க்ரமஹேதுத்வாத் அனைத்து ஜீவராசிகளும் செல்வதற்கு (இயங்குவதற்கு) உதவி புரிகிறார் வா எனவே க்ரம: பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ராந்தே விஶ்ணும் (மனு ஸ்ம்ரிதி 12.121)
மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணுவை (அவரது) இயக்கத்தினால் (அறியவும்)

அனைத்து இடங்களிலும் செல்வதாலும், அனைவரும் செல்வதற்கு (இயங்குவதற்கு) துணை புரிவதாலும், பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக