வெள்ளி, அக்டோபர் 19, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 88

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

83. ஓம் க்ருதயே நம:
புருஶப்ரயத்ன: அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு க்ருதி: 'க்ருதி' என்று பொருள் க்ரியா வா: செயல்களுக்கு ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் தத் ஆதாரதயா வா அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால் லக்ஷ்யதே க்ருத்யேதி வா 'க்ருதி' என்றால் பகவானையே குறிக்கும் க்ருதி: பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு 'க்ருதி' என்று பொருள். அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் 'க்ருதி' என்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறது. எனவே, பகவான் 'க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

84. ஓம் ஆத்மவதே நம:
ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் ஆத்மவான் பகவான் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் 'ஆத்மவான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ பகவ: கஸ்மின்ப்ரதிஶ்டித இதி ஸ்வே மஹிம்னி' (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1) சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த பகவான் எங்கு நிலைக்கொண்டிருக்கிறார்? அவரது மஹிமையிலேயே.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக