வெள்ளி, அக்டோபர் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 85

9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||

இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

74. ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
80. அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

74. ஓம் ஈஶ்வராய நம:
ஸர்வஶக்திமத்தயா மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் ஈஶ்வர: பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 36-வது திருநாமத்தில் ‘ஈஶ்வர:’ என்பதற்கு ஐஸ்வர்யம் உடையவர் என்று பொருள். இங்கு, சக்திமிக்கவர் என்று பொருள்.

75. ஓம் விக்ரமிணே நம:
விக்ரம: ‘விக்ரம’ என்றால் ஸௌர்யம் சூரத்தனம் என்று பொருள் தத்யோகாத் அத்தகைய சூரத்தனம் உடையவராதலால் விக்ரமீ பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நாம் பொதுவாக வீர, தீர, சூரன் என்று கூறுவது உண்டு. இவற்றின் பொருள் என்ன? வீரம் மிக்கவன் வீரன்; எதிரிகளிலும் வீரர்கள் இருப்பார்கள்; அவ்வாறு பல வீரர்கள் ஒன்றே திரண்டு வந்து எதிர்த்தாலும் தன் தைர்யத்தை இழக்காதவன் தீரன். அத்தகைய எதிரிகள் பலர் எதிர்ப்பினும், அவர்கள் அனைவரையும் வெல்பவன் சூரன். பகவான் சூரர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்.

76. ஓம் தன்வினே நம:
தனுரஸ்யாஸ்தீதி (ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால்  தன்வீ பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
  
(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ரீஹ்யாதித்வாதினிப்ரத்யய: | (தனுஸ் என்ற இந்த சொல்), ‘வ்ரீஹ்யாதி’ சொற்றொடர்களில் வருவதால் இங்கு தனு என்ற சொல்லுடன் ‘இனி’ என்ற விகுதி சேர்கிறது (வ்ரீஹ்யாதிப்யஸ்ச – பாணினி ஸூத்ரம் 5.2.116).

ராம: ஶஸ்த்ரப்ருதாமஹம் (ஸ்ரீமத் பகவத்கீதை 10.31)
படைதரித்தோரில் நான் இராமன்
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக