ஞாயிறு, ஏப்ரல் 08, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 29

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று ஸ்ரீமத் பகவத்கீதை, மனுஸ்ம்ருதி மற்றும் சில உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.

ததா மேலும்,
க்ஷேத்ரஞ்யம் சாபி மாம் வித்தி (ஸ்ரீ பகவத்கீதை 13.2)
எல்லா க்ஷேத்திரங்களிலும், க்ஷேத்ரக்ஞ்யன் நானே என்றுணர்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி (ஸ்ரீ பகவத்கீதை 15.10)
அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர்கள் காண்பதில்லை.

அஞ்ஞானேனாவ்ருதம் ஞானம் (ஸ்ரீ பகவத்கீதை 5.15)
அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது
.
அவ்யக்தாதிவிஶேஶாந்தமவித்யாலக்ஷணம் ஸ்ம்ருதம்
மேலும் ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது: பெயர், மற்றும் உருவமற்ற மூலப் ப்ரக்ரிதி முதல், ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட அனைத்து பொருட்கள் ஈறாக, அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஆஸீதிதம் தமோபூதம் (மனு ஸ்ம்ரிதி 1.5)
மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது: இவை அனைத்தையும் முதலில் (அறியாமை என்னும்) இருள் சூழ்ந்திருந்தது.

வாசாரம்பணம் (சாந்தோக்ய உபநிஶத் 6.1.4)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து வேறுபாடுகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன

யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஶ்யதி | யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத் தத் கேன கம் பஶ்யேத் தத் கேன கம் ஜிக்ரேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.14)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு இருமைகள் உள்ளனவோ அங்கேதான் ஒருவர் மற்றொன்றைப் பார்க்கிறார். எங்கு அனைத்தும் ஆத்மா என்ற ஒன்றே உள்ளதோ அங்கு யார் எதை பார்க்க முடியும், எதை நுகர முடியும்?

யஸ்மின் ர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத: |
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈசாவாஸ்ய உபநிஶத் 7)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?

யத்ர நான்யத் பஶ்யதி நான்யத் விஜானாதி (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எங்கு மற்ற எதையும் காணவும் அறியவும் முடியாதோ.

பேதோSயமஞானநிபந்தன:
கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே அறியாமையின் காரணத்தால் வேறுபாடுகள் தோன்றுகின்றன

நேஹ நானாஸ்தி கிஞ்சன (கதோபநிஷத் 2.1.11)
கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு வேற்றுமை எதுவும் இல்லை

ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பஶ்யதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.19)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவனொருவன் இங்கு (ப்ரஹ்மத்திற்கும் மற்றதற்கும்) வேறுபாடுகளைக் காண்கின்றானோ அவன் மறுபடியும் மறுபடியும் மரணங்களை அடைகிறான் (அதாவது முக்தி அடையாமல் மீண்டும் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து இறக்கிறான்).

விஸ்வதஸ்சஶு: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

யோனிமதிதிஶ்டத்யேகோ விஶ்வானி ரூபாணி யோநிஶ்ஸ்ச ஸர்வா:
யார் அந்த மூலத்தில் நிலைபெற்றிருக்கின்றாரோ அவரே (அந்த பரப்ரஹ்மமே) அனைத்து ரூபங்களும் யோனிகளும் ஆவார்.

அஜாமேகம் லோஹிதசுக்லகிருஶ்ணாம்
பஹ்வி: ப்ரஜா: ஸ்ருஜமானாம் ஸுரூபா: |
அஜோ ஹ்யேகோ ஜுமானோSனுஶேதே
ஜஹாத்யேனாம் புக்தபோகாமஜோSன்ய: || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.5)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: சிவப்பு, வெண்மை, கருமை நிறம் படைத்த பிறப்பற்ற ஒன்று தன்னைப் போலவே பலவற்றை ஸ்ருஷ்டிக்கிறது. அதன் அருகே பிறப்பற்ற ஒன்று படுத்துக்கிடக்கிறது. மற்றொரு பிறப்பற்ற ஒன்று அதை (அந்த சிவப்பு, வெண்மை, கருப்பு நிறமுள்ளதை) அனுபவித்துவிட்டு அதனை துறந்து சென்றது.

தேவாத்மக்திம் விததே
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த திவ்யமான ஆத்ம சக்தியை த்யானித்தார்கள்

ந து தத்த்விதீயமஸ்தி ததோSன்யத் விபக்தம் யத் பஶ்யேத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த ஷுஷுப்தி நிலையில் ஆத்மாவைத்தவிர) இரண்டாவதான ஒரு பொருள் இல்லை. அங்கே அவன் (அந்த ஜீவாத்மா) எதையும் காண்பதில்லை, ஆனாலும் அனைத்தையும் காண்கிறான்.

ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.2)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ருத்ரர் ஒருவரே. (அவரைத்தவிர) மற்றொருவர் இல்லை.

இத்யாதி  இவ்வாறு (புராணங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக