ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 36


முந்தைய பதிவில், ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர்

"(நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது. ஆயினும், பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும். அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே குறிக்கும்"

என்று கூறினார். அவற்றுள் பீஶ்மாசார்யார் எந்தெந்த திருநாமங்களை (எவ்வாறு ஆயிரம் நாமங்களை தேர்ந்தெடுத்துகூறுகிறார் என்பதை இன்றைய பதிவில் காண்போம்.


யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||

யானி, நாமானி, கௌணானி, விக்யாதானி, மஹாத்மன: |
ரிஶிபி:, பரிகீதானி, தானி, வக்ஷ்யாமி, பூதயே ||

(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

யானி நாமானி கௌனானி குண ஸம்பந்தீனி குணயோகாத் ப்ரவ்ருத்தானி தேஶு ச யானி (அந்த பர ப்ரஹ்மத்தின்) குணங்களினின்று தோன்றியதும் 

விக்யாதானி ப்ரஸித்தானி (அந்த குணங்களினின்று தோன்றிய திருநாமங்களில்) மிகவும் புகழ் பெற்றதும், 

ரிஶிபி: மந்த்ரைஸ்தத்தர்ஶிபிஶ்ஸ்(அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களால் 

பரிகீதானி பரித: ஸமந்தத: பரமேஶ்வராக்யானேஶு தத்ர தத்ர கீதானி மஹாம்ஸ்சாஸாவாத்மேதி பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும் மஹாத்மா தஸ்யாசிந்த்யப்ரபாவஸ்ய அந்த மஹாத்மாவின் நினைத்தற்கரிய பெருமைகளை 

தானி வக்ஷ்யாமி பூதயே புருஶார்த்தசதுஷ்ட்யஸித்யை பூதயே புருஶார்த்த சதுஷ்ட்யார்தினாமிதி நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன். 

மஹாத்மா

யச்சாப்னோதி யதாதத்தே யச்சாத்தி வியாநிஹ |
யச்சாஸ்தி சந்ததோ பாவஸ்தஸ்மாதாத்மேதி கீர்த்யதே || (லிங்க புராணம் 1.70.96)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த புருஶன் ஸுஷுப்தி தசையில் ப்ரஹ்மத்தை உணர்கிறான், ஸ்வப்ன தசையில் இந்த்ரியங்கள் இல்லாமலே விஷய சுகத்தை அனுபவிக்கிறான் மற்றும் ஜாக்ரத தசையில் (இந்த்ரியங்களோடு) விஷயங்களை அனுபவிக்கிறான், இவ்வாறு எப்பொழுதும் அவன் நிகழ் காலத்திலேயே இருப்பதால் அந்த புருஶனை ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

இதி வசனாதயமேவ மஹாநாத்மா இந்த லிங்க புராண வாக்யத்தின் மூலம் அந்த பரப்ரஹ்மமே மஹாத்மா என்று அறியப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக