வியாழன், ஏப்ரல் 26, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 38

ரிஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி:என்று தொடங்கி "ச்சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரிஆஸீனமம்புத்ஶ்யானம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம்சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீக்ருஷ்ணமாஶ்ரயேவரை உள்ள ஸ்லோகங்களை நமது அன்றாடப் பாராயண க்ரமத்தில் கூறவேண்டும்இந்த ஸ்லோகங்களுக்கு ஆதிசங்கரர் (மற்றும் மற்ற ஆச்சார்யர்களும் கூட) உரை எழுதவில்லை. இந்த ஸ்லோகங்களுக்கு எனக்குத் தெரிந்த வரை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னித்து, சுட்டி காட்டவும்.


நம: ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஶ்ணவே ப்ரபவிஶ்ணவே ||
அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதியாய் (அவை உருவாவதற்குக் காரணமாய்), இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவராய் (பூ என்ற சொல் பொதுவாக பூமியைக் குறித்தாலும், இங்கு பிரபஞ்சம் என்று பொருள் கொள்வதே தகும்) பற்பல வடிவங்களைத் தாங்குபவராய், எங்கும் நிறைந்தவரான பகவான் விஶ்ணுவை நான் வணங்குகிறேன்.

ஸஶங்க ஶக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |
ஸஹார வக்ஷஸ்தல ஶோபி கௌஸ்துபம் நமாமி விஶ்ணும் ஶிரஸா சதுர்புஜம் |
|
கையில் நன்மையை பயக்கவல்ல சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளவரும், அழகிய கிரீடம் மற்றும் குண்டலத்தை தரித்துள்ளவரும், மஞ்சள் பட்டாடை அணிந்துள்ளவரும், தாமரைக் கண்ணனும், அழகிய மாலைகளாலும், தனது திருமார்பில் கௌஸ்துபம் எனும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவரும், நான்கு திருக்கைகளை உடையவருமான பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன். 

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி 
ஆஸீனமம்புதஶ்யாமம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம் |
சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷம் 
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீகிருஶ்ணம் ஆஶ்ரயே ||     
பாரிஜாத மரத்தினடியில் உள்ளதொரு பொன்மயமான ஸிம்மாஸனத்தில் வீற்றுள்ளவரும், நீருண்ட கார்மேகத்தை ஒத்த திருமேனி வண்ணம் கொண்டவரும், நீண்ட, பெரிய திருக்கண்களை உடையவரும், திருமேனி எங்கும் தக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவரும், வெண்மதியைப் போன்ற குளிர்ந்த திருமுகம் உடையவரும், நான்கு திருக்கைகளை உடையவரும், ஸ்ரீவத்ஸம் எனும் மறுவால் அலங்கரிக்கப் பெற்ற திருமார்பை உடையவரும், ருக்மிணீ பிராட்டியாரும், ஸத்யபாமையும் உடனிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் சரணடைகிறேன்.

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இது ஸ்ரீகிருஶ்ணாவதாரத்தில் தான் நமக்கு  கிடைத்தது. எனவே, ஸஹஸ்ரநாமம் தொடங்கும் முன்பாக பகவான் ஸ்ரீகிருஶ்ணரின் திருவடி தொழுவது உசிதமாகும். பகவத்பாதாளும் தனது பாஶ்யத்தின் தொடக்கத்தில் பகவான் கிருஶ்ணரை வணங்கியே தொடங்கினார் என்பதை முதல் பதிவிலேயே கண்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக