வியாழன், ஏப்ரல் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 32

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்றைய பதிவில் மேலும் பற்பல மேற்கோள்களுடன் தனது விளக்கத்தை முடிக்கிறார். நாம ஸங்கீர்த்தனத்தை போற்றும் சில மேற்கோள்களையும், குறிப்பாக ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம மஹிமையை விளக்கும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களையும் குறிப்பிடுகிறார்.

அன்யபராணாமபி மந்த்ரார்த்த வாதானாம் ப்ராமான்யம் அங்கீகர்த்தவ்யம் | தேஶாம் அப்ராமான்யகதநேன உரகத்வம் கதவான்னஹுஷ: | தத்கதம்?
எனவே மற்ற அர்த்த வாதமான விஷயங்களைக் கூறும்பொழுதும், மந்திரங்களின் ப்ரமாணத்தை (அதிகாரத்தை) நாம் ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறிய நஹுஷன் ஒரு பாம்பாய் பிறந்தான். இது எவ்வாறு?

ருயஸ்து பரிஶ்ராந்தா வாஹ்யமானா துராத்மனா |
தேவர்யோ மஹாபாகாஸ்ததா ப்ரஹ்மர்யோSமலா: || 8

பப்ரஸ்சு: ஸம்யம் தே து நஹும் பாபசேதஸம் |
ய இமே ப்ரஹ்மணா ப்ரோக்தா மந்த்ரா வை ப்ரோக்ஷனே கவாம் || 9

ஏதே ப்ரமாணம் பவத உதாஹோ நீதி வாஸவ |
நஹுஶோ நீதி தானாஹ ஸஹஸா மூடசேதன: || 10

பாப சிந்தனை உடைய நஹுஶனால் பல்லக்கை சுமக்குமாறு நியமிக்கப் பட்ட தூய்மையான குணம்படைத்த முனிவர்கள், ப்ரஹ்மரிஷிகள் மற்றும் தேவ ரிஷிகள் களங்கமான மனம் படைத்த அந்த நஹுஶனைப் பார்த்து தங்களது சந்தேகத்தைப் பற்றி விளக்கம் கேட்டனர். ‘ஹே இந்த்ரனே! வேதங்களில் பசுக்களை ப்ரோக்ஷிப்பதர்க்கு (மந்திர நீரைத் தெளித்து தூய்மை படுத்துவதற்கு) உரிய மந்திரத்தை தாங்கள் ப்ரமாணமாக ஏற்கிறீர்களா?’ அதற்கு அந்த மந்த புத்தியுடைய நஹுஷன் ‘இல்லை’ என்று பதிலுரைத்தான்.

ருய ஊசு: -
அதர்மே ஸம்ப்ரவ்ருத்தஸ்த்வம் தர்மம் ச விஜிக்ருக்ஷஸி |
ப்ரமாணமேததஸ்மாகம் பூர்வம் ப்ரோக்தம் மஹர்ஷிபி: || 11

அந்த முனிவர்கள் பதிலுரைத்தனர்: நீ அதர்மத்தின் வழி சென்று, தர்மத்தை துறக்க விரும்பிகிறாய். முற்காலத்தில் மஹரிஷிகள் அந்த மந்திரத்தை ப்ரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று எங்களுக்கு போதித்துள்ளனர்.

அகஸ்த்ய உவாச -
ததோ விவதமான: ஸன் ருஷிபி: சஹ பார்த்திவ: |
அத சாமஸ்ப்ருஷன்மூர்த்த்னி பாதேனாதர்மபீடித: || 12

அகஸ்த்யர் கூறினார்: அப்பொழுது அந்த ரிஷிகளுடன் விவாதம் செய்த வண்ணம் அதர்மம் தலையெடுத்து அந்த நஹுஷன் எனது தலையின் மீது அவனது காலை வைத்தான்.

தேனாபூத்ததசேதா: ஸ நி:ஸ்ரீகஸ்ச ஷசீபதே: |
ததஸ்தமஹமுத்விக்னமாவோசம் பயபீடிதம் || 13

ஹே இந்த்ரனே! இதனால் அவனது நற்புத்தி தொலைந்து அவனது செல்வங்கள் அவனை விட்டு விலகிச் சென்றன. புத்தியிழந்து பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நஹுஷனைப் பார்த்து நான் இவ்வாறு கூறினேன்.

யஸ்மாத் பூர்வை: க்ருதம் மார்கம் மஹர்ஷிபிரனுஷ்டிதம் |
அதுஷ்டம் தூஷயஸி வை யச்ச மூர்த்ன்ர்யஸ்ப்ருஷ: பதா || 14
யச்சாபி தவம்ருஷீன்மூட பிரஹ்மகல்பான் துராசதான் || 15

வாஹான் க்ருத்வா வாஹயஸி தேன ஸ்வர்காத்தபிரப: |
த்வம் ஸ்வபாபபரிப்ரஷ்ட: க்ஷீனபுண்யோ மஹீபதே || 16

தஸவர்ஷஸஹஸ்ராணி ஸர்ப்பரூபதரோ மஹீம் |
விசரிஷ்யஸி தீர்னஸ்ச்ச புன: ஸ்வர்கமவாப்ஸ்யஸி || 17

(அகஸ்த்யர் கூறுகிறார்) அடே மூடனே! நீ பல காலமாய் மஹரிஷிகளால் உபதேசிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மையான வழிமுறைகளை தவறென்று உரைத்தாய், எனது தலை மீது உனது கால்களை வைத்தாய், எவரை காண்பதுவும் மிகக்கடினமானதோ அத்தகைய உயர்ந்த மஹரிஷிகளை உனது பல்லக்கை சுமக்கச் செய்தாய். எனவே, ஒ அரசனே! இந்த குற்றங்களுக்காக, நீ உனது பாபங்களால் பீடிக்கப்பட்டு, உனது புண்ணியத்தையும் ஒளியையும் இழந்து, ஒரு பாம்பின் வடிவம் எடுத்து பூமியில் பத்தாயிரம் ஆண்டுகள் உழல்வாய். (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பின்னர் உன் சாபம் தீர்ந்து பிறகு ஸ்வர்கத்தை வந்து அடைவாய்.
இதி ஸ்ரீமஹாபாரதே – இவ்வாறு ஸ்ரீமஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

அத: ஷ்ரத்தேயமாத்மஞானம் எனவே ஆத்மஞானத்தை நம்பிக்கையுடன் ஒத்துக்கொள்ளவேண்டும்.

அஶ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி || (ஸ்ரீ பகவத் கீதை 9.3)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பகையைச் சுடுவோய்! அறத்தில் நம்பிக்கையில்லாத மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக ஸம்ஸார பாதைகளில் மீளுகின்றனர்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஐதரேயகே ச,

ஏஷ பந்தா ஏதத்கர்மைதத்ப்ரஹ்மைதத்ஸத்யம் தஸ்மான்ன ப்ரமாத்யைத்தன்னாதீயான்ன ஹ்யத்யாயன்பூர்வே யேSத்யாயம்ஸ்தே பராபபூவு: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.1)

ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இதுவே வழி, இதுவே கர்மம், இதுவே ப்ரஹ்மம் மற்றும் இதுவே உண்மையாகும். எனவே, இதைவிட்டு பிறழவோ, இதை துறக்கவோ வேண்டாம். முற்காலத்தில், இதை துறந்தவர்கள் தத்தம் வழியினின்று தவறினர்.

ததுக்தம்ருஶிணா ரிஷிகளும் இவ்வாறு கூறுகின்றனர்,

ப்ரஜா ஹ திஸ்ர அத்யாயமீயுர்ன்யன்யா அர்கமபிதோ விவிஶ்ரே | ப்ருஹத்ததஸ்தௌ புவனேஶ்வந்த: பவமானோ ஹரித ஆவிவே: (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.4)
ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:
மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். மற்றவர்கள் அக்னி, அனைத்துலகங்களின் மத்தியில் இருக்கும் கதிரவனையும், உபாசித்தனர். பிறகு உலகை தூய்மைபடுத்தும் காற்று (வாயு) வீசத்தொடங்கியது (சிலர் அந்த வாயுதேவனை உபாசித்தனர்).

ப்ரஜா ஹ திஸ்ரோ அத்யாயமீயுரிதி யா வை தா இமா: பிரஜா: திஸ்ரோSத்யாயமீயுஸ்தானிமானி வயாம்ஸி வங்கா வகதாஶ்சேரபாதா: | (ஐத்ரேய ஆரண்யகம் 2.1.5)
ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது:
மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்கள். எந்த மூன்று வகையான மனிதர்கள் தர்மத்தை துறந்தார்களோ, அவர்கள் பறவைகளாகவும், மரம், மூலிகைச் செடிகளாகவும், பாம்புகளாகவும் பிறப்பெடுக்கிறார்கள்.

இதி ஸ்ருதம் |  இவ்வாறு ஸ்ருதி கூறுகிறது.

வங்கா வனகா: வ்ருக்ஷா: | ‘வங்கா’ என்பது வனங்களில் வளரும் மரங்களாகும்.
வகதா: ஒஷதயச்ச | ‘வகதா’ என்பது மூலிகைச் செடிகளாகும்.
இரபாதா உர:பாதா: ஸர்பாதய: | ‘இரபாதா’ என்பது ‘மார்பையே கால்களாகக் கொண்ட பிராணிகளாகும்’, அதாவது பாம்புகளாகும் (பாம்புகள் ஊர்ந்து செல்வதால் அவற்றின் மார்பு பிரதேசமே அவற்றின் கால்களாகும்).

ததா ச ஈஶாவாஸ்யே அவித்வன்னின்தார்த்தே மந்தர: - மேலும், ஈசாவாஸ்ய உபநிஶத்தில் (தர்மத்தை பற்றிய) அறிவற்றவரை குறைகூறும் மந்திரம் இவ்வாறு உள்ளது –

அசுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா: |
தாக்ம்ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||
(ஈஶாவாஸ்ய உபநிஶத் 3)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
தங்களை அழித்துக்கொள்கின்ற மனிதர்கள் எவர்களோ, அவர்கள் அசூர்யா என்ற பெயருடைய அடர்ந்த இருளால் மூடப்பட்ட எந்த லோகங்கள் உண்டோ, அந்த லோகங்களை மரணத்திற்குப் பின் அடைகிறார்கள் (இங்கு லோகம் என்னும் சொல்லை சரீரத்தைக் குறிப்பதாகவும், அவர்கள் அசுர பிறப்பை அடைவார்கள் என்றும் கொள்ளலாம்).

அஸந்நேவ ஸ பவதி | அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் ||
(தைத்த்ரிய உபநிஶத் 2.6)
இதி தைத்த்ரியே
தைத்த்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எவனொருவன் ப்ரஹ்மத்தை பொய்யென்று நினைக்கின்றானோ அவன் தனது உண்மை தன்மையை இழக்கின்றான்.

ததா ஷகுந்தலோபாக்யானே
யோSன்யதா சந்தமாத்மானமன்யதா ப்ரதிபத்யதே |
கிம் தேன ன க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரினா ||
ஷகுந்தலோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது:
எவனொருவன் எங்கும் நிறைந்துள்ள ஆத்மாவை பலவென்று நினைத்து தனது ஆத்மாவை அழிக்கின்றானோ, அந்த திருடனால் எந்த பாபம் தான் செய்யப்படவில்லை?

இத்யலமதிப்ரசங்கேன – (நான் கூறவந்ததை கூறிவிட்டேன்) இனி மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை.

ஸஹஸ்ரநாமஜபஸ்ய அனுரூபம் மானசஸ்நானமுச்யதே – ஸஹஸ்ரநாம ஜபம் நமது உள்ளத்தை (ஆத்மாவை) தூய்மைபடுத்தும் ஸ்நானமாக வர்ணிக்கப்படுகிறது.

யஸ்மின் தேவாஸ்ச்ச வேதாஸ்ச பவித்ரம் க்ருத்ஸ்னமேகதாம் |
வ்ரஜேத்தன்மானஸம் தீர்த்தம் தத்ர ஸ்னாத்வாம்ருதோ பவேத் ||
அதுவே மானச தீர்த்தம்; மனதின் ஸ்நானம். எங்கு நீராடுவதால் தேவர்களும் வேதங்களும் புனிதமும், பூர்ணத்வமும், ஒருமையும் அடைகின்றார்களோ (அடைகின்றனவோ), அங்கு நீராடுவதால் அமரத்தன்மை கிடைக்கும்.

ஞானஹ்ருதே த்யானஜலே ராகத்வேமலாபஹே |
ய: ஸ்னாதி மானஸே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் ||
எவனொருவன் ஞானம் எனும் குளத்தில், த்யானம் என்னும் நீரால் நிறைந்த அந்த மனமென்னும் தீர்த்தத்தில் நீராடுகிறானோ, அவன் (தன் மனத்திலிருக்கும்) விருப்பு வெறுப்பென்னும் அழுக்குகளை களைந்து பரமகதியை அடைகிறான்.

ஸரஸ்வதி ரஜோரூபா தமோரூபா களிந்தஜா |
ஸத்வரூபா ச கங்கா ச ந யாந்தி ப்ரஹ்ம நிர்குணம் ||
ஸரஸ்வதி (நதி) ரஜோமயமானது, யமுனை தமோமயமானது மற்றும் கங்கை ஸத்வமயமானது. அதாவது (அவை குண சேர்க்கையுடன் இருப்பதால்) அவை (அவற்றில் நீராடுபவனை) நிர்குண ப்ரஹ்மத்திடம் அடைவிக்க முடியாது.

ஆத்மா நதி ஸம்யமதோயபூர்ணா ஸத்யஹ்ருதா ஷீலதடா தயோர்மி: |
தத்ராவகாஹம் குரு பாண்டுபுத்ர ந வாரினா ஷுத்யதி சாந்தராத்மா ||
ஆத்மாவே நதியாகும், புலனடக்கம் அதிலுள்ள நீராகும்; சத்தியமே ஆழமாகும்; நன்னடத்தையே அதன் கரைகளாகும்; கருணையே அதிலுள்ள அலைகளாகும்; ஹே பாண்டுபுத்ரனே!! இந்த (ஆத்ம) நதியில் நீராடுவாயாக. (மற்ற நதிகளிலுள்ள) வெறும் நீரினால் ஆத்மா தூய்மையடையாது.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

மானசம் ஸ்நானம் விஶ்ணுசிந்தனம்
பகவான் ஸ்ரீவிஶ்ணுவை த்யானிப்பதே நமது மனத்திற்கும் ஆத்மாவிற்கும் ஸ்நானமாகும்.

இதி ஸ்ம்ருதௌ – இவ்வாறு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.

ஜப்யேனைவ து ஸம்ஸித்யேத்  ப்ராஹ்மனோ நாத்ர ஸம்ஷய: |
குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மன உச்யதே ||
இதில் சந்தேஹமே இல்லை! ஜபத்தினால் மட்டுமே ஒருவன் பிராமணத் தன்மையை அடைகிறான். மற்ற கர்மங்களை செய்தாலும் செய்யாவிட்டாலும், அவன் ஜபத்தினால் மட்டுமே தூய்மை அடைகிறான். அதனால், ஒரு பிராமணன் ‘மைத்ர’ (அனைவரின் நண்பன்) என்று அழைக்கப்படுகிறான்.

இதி மானவம் வசனம் – இவ்வாறு மனு ஸ்ம்ருதியில் (2.87) கூறப்பட்டுள்ளது.

ஜபஸ்து ஸர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |
அஹிம்ஸயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே ||
அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜபயஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.
இதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யஞ்ஞானாம் ஜப்யஞ்ஞோSஸ்மி | (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)
யக்ஞங்களில் நான் ஜபயக்ஞ்யம்
இதி ஸ்ரீகீதாயாம் – இவ்வாறு ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோSபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி: ||
(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)

ஸ்ரீ பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
தூய்மையாக இருக்கின்றானோ அல்லவோ, அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணன் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் உள்ளும் புறமும் தூய்மையடைகிறான்.

இத்யாதி – இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யதேகம் தைவதம் ப்ரஸ்துதம் தஸ்யோபலக்ஷணமுச்யதே – (மேலே) எந்த ஒரு கடவுளைப் பற்றி கூறப்பட்டதோ, அவரது குணதிசயங்களை (பீஷ்மர்) வர்ணிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக