சனி, ஏப்ரல் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 39

அத ஸஹஸ்ரநாம
(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது

அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்  அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்; எனவே, அந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |

இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் |
ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.

ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச |
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு

இத்யாரப்ய இது தொடக்கமாக

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |
விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)
அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி பர்யந்தம் கீதாயாம் இது (1௦.42 ஸ்லோகம்) ஈறாக, ஸ்ரீமத் பகவத்கீதையிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மைவேதம் விஶ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12) இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.1.10) இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இதி ஸ்ருதிஸ்ச இவ்வாறு ஸ்ருதியிலும் (வேதங்களிலும்) கூறப்பட்டுள்ளது.

புனருக்தி தோஷம்: ஸஹஸ்ரநாமம் எனும்போது ஆயிரம் நாமங்களை கூறவேண்டும். ஒரே நாமத்தை ஆயிரம் முறை கூறலாகாது. ஆனால், ஸஹஸ்ரநாமத்தில் சில திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன (உதாரணத்திற்கு விஶ்ணு). அவற்றிற்கு உரை எழுதும் பொழுது அர்த்தத்தில் வேறுபாடு காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவை தனித்த திருநாமமாக ஏற்றுக்கொள்ள படமாட்டாது (ஆயிரம் எண்ணிக்கையும் வராது). இதை புனருக்தி தோஷம் என்பர். எனவே, இங்கு ஆதிசங்கர பகவத்பாதர், தமது சஹஸ்ரநாம உரையில் அவ்வாறு புனருக்தி தோஷங்கள் இல்லை என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்.

மேலும், இவ்வாறு பலமுறை வரும் திருநாமங்களுக்கு உரை எழுதுகையில், முதன் முறை வரும்பொழுதே அதன் மற்ற பொருள்களையும் கொடுத்துள்ளார். அந்த பொருட்களில் ஒரு சிலவற்றை அதே திருநாமம் பின்னர் வரும்பொழுது எடுத்தாள்கிறார். இதை புனருக்தி தோஷமாக கருத இயலாது. முதன் முறை வரும் திருநாமத்திற்கு (அவர் கூறியுள்ள பல பொருட்களில்) முதல் பொருளையும், மற்ற பொருள்களை பின்வரும் இடங்களுக்குமாக நாம் கருதவேண்டும். 

விஷ்ண்வாதிஷப்தானாம் புனருக்தானாமபி வ்ருத்திபேதே-நார்த்தபேதான்ன பௌனருக்த்யம் |
விஶ்ணு முதலிய திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வரும்போதும், அந்த திருநாமத்தின் பொருளில் (ஒவ்வொரு இடத்திலும்) வேறுபாடுகள் உள்ளதால் புனருக்தி தோஷம் இல்லை.

ஸ்ரீபதிர்மாதவ இத்யாதீனாம் வ்ருத்யேகத்வேSபி ஶப்தபேதான்ன பௌனருக்த்யம் |
ஸ்ரீபதி, மாதவ முதலிய திருநாமங்களின் பொருள் ஒன்றை இருப்பினும் அந்த நாமங்கள் வெவ்வேறாய் இருப்பதனால் புனருக்தி தோஷம் இல்லை.

அர்த்தைகத்வேSபி ந பௌனருக்த்யம் தோஷாய, நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய கிமேகம் தைவதமிதி ப்ருஶ்டேரேக-தைவதவியத்வாத்|
இந்த விஶ்ணு சஹஸ்ரநாமமே, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற கேள்வியிலிருந்து ஒரே பரம்பொருளின் விஷயமாகப் பிறந்தது. எனவே, பல திருநாமங்களின் பொருள் ஒன்றாய் இருப்பினும் புனருக்தி தோஷம் வருவதில்லை.

யத்ர ஃபுல்லிங்கஶப்தப்ரயோகஸ்தத்ர விஶ்ணுர்விஶேஶ்ய:
(இந்த சஹஸ்ரநாமத்தில்) ஆண்பால் திருநாமங்கள் பரப்ரஹ்மத்தின் விஶ்ணு ஸ்வரூபத்தையும்

யத்ர ஸ்திரீலிங்கஶப்தஸ்தத்ர தேவதா விஶேஶ்யதே
பெண்பால் திருநாமங்கள் மற்ற பரப்ரஹ்மத்தின் மற்ற தேவதை ஸ்வரூபத்தையும்

யத்ர நபும்ஸகலிங்கஶப்தஸ்தத்ர ப்ரஹ்மேதி விஶேஶ்யதே |
(ஆண்பாலும் இல்லாமல் பெண்பாலும் இல்லாமல்) பொதுவான திருநாமங்கள் (நேரடியாக) பரப்ரஹ்மத்தை குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும்.

யத: ஸர்வாணி பூதானி (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 11) எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ...

இத்யாரப்ய ஜகதுத்பத்தி ஸ்திதிலயகாரணஸ்ய ப்ரஹ்மண ஏக தைவதத்வேனாபிஹிதத்வாதாதாவுபயவிதம் ப்ரஹ்ம விஶ்வஶப்தே-நோச்யதே

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் 11) இது தொடக்கமாக இந்த உலகின் தோற்றம், காத்தல் மற்றும் அழிவின் காரணமாய் உள்ள ப்ரஹ்மமே ஒரே முழுமுதற் கடவுளாக (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) கூறப்பட்டுள்ளது. எனவே (காரண  மற்றும் காரிய) ப்ரஹ்மம் முதலில் “விஶ்வ” எனும் திருநாமத்தால் (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) அழைக்கப் படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக