செவ்வாய், ஏப்ரல் 24, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 37

"ரிஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி:"என்று தொடங்கி "ச்சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி,ஆஸீனமம்புத்ஶ்யானம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம்சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீக்ருஷ்ணமாஶ்ரயேவரை உள்ள ஸ்லோகங்களை நமது அன்றாடப் பாராயண க்ரமத்தில் கூறவேண்டும்இந்த ஸ்லோகங்களுக்கு ஆதிசங்கரர் (மற்றும் மற்ற ஆச்சார்யர்களும் கூட) உரை எழுதவில்லை. இந்த ஸ்லோகங்களுக்கு எனக்குத் தெரிந்த வரை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னித்து, சுட்டி காட்டவும்.


ஓம் நமோ பகவதே வாஸுதேவாய |
பகவான் வாஸுதேவனான ஸ்ரீ கிருஶ்ணனுக்கு எனது வணக்கங்கள்!!!

ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்
விஶ்வாதாரம் ககனஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத் த்யானகம்யம்
வந்தே விஶ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் ||
அமைதியே வடிவானவரும், அரவணை மேல் துயில் கொள்கின்றவரும், நாபியில் (கொப்பூழில்) தாமரையை உடையவரும், தேவர்களின் தலைவரும், இந்த ப்ரபஞ்சத்திற்கே ஆதாரமானவரும்*, ஆகாயத்திற்கு ஒப்பானவரும், நீருண்ட கார்மேக வண்ணரும், அழகிய அங்கங்களை உடையவரும் (மங்களங்களை அள்ளித்தரும் அங்கங்களை உடையவரும்), திருமகள் கேள்வனும், தாமரைக் கண்ணனும், யோகிகளின் இதயத்திற்குள் த்யானத்தால் அடையப்படுபவரும், ஸம்ஸார பயத்தைப் போக்குபவரும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.
சிலர் விஶ்வாதாரம் என்பதற்கு பதிலாக விஶ்வாகாரம் என்று கூறுவது வழக்கம். இதற்கு இந்த ப்ரபஞ்சமே வடிவானவரும் என்று பொருள். 
ககனஸத்ருஶம்: ஆகாயத்திற்கு ஒப்பானவர். இதற்கு பல பொருள்கள் கூறலாம். பகவான் ஆகாயத்தைப் போன்று எங்கும் பரந்து, சூழ்ந்திருப்பவர் என்பது ஒரு பொருள். உபநிடதங்களில் பல இடங்களில் ஆகாயம் (ஆகாஶ) என்ற சொல்லிற்கு பகவான் நாராயணன் என்றே பலரும் பொருளுரைத்திருக்கின்றனர்.

மேகஶ்யாமம் பீதகௌஶேயவாஸம் 
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாஷம் 
விஶ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்||
நீருண்ட கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவை மார்பில் தாங்கியுள்ளவரும், மார்பில் கௌஸ்துப மணியை அணிந்துள்ளவரும், புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும், தாமரைக் கண்ணனும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக