வியாழன், மே 03, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 44

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஶ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.


ஹிம்ஸாதிரஹிதேன ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி தர்யிதும் விஷ்வப்தேன ப்ரஹமாபிதீயத இதி வா |
அல்லது, மற்ற உயிர்களுக்குத் துன்பமின்றி விஷ்வமாகிய இந்த பிரபஞ்சத்திற்கு நமது போற்றுதலும், வணக்கங்களும் உரித்தாக வேண்டும். இதைக் குறிப்பதற்காகவே, பரப்ரஹ்மத்தை “விஶ்வம்” என்று அழைக்கின்றனர்.

மத்கர்மக்ருன்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |
       நிர்வைர: ஸர்வபூதேஶு ய: ஸ மாமேதி பாண்டவ || (ஸ்ரீ பகவத்கீதை 11.55)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
என்தொழில் செய்வான், எனைத் தலைக்கொண்டோன், என்னுடைய அடியான், பற்றெலாம் இற்றான், எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான், யாவன், பாண்டவா, அவனென்னை எய்துவான்!!!

இதி | இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:
ஸமமதிராத்மஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே |
ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சித்துச்சை:
ஸ்திதமனஸம் தமவேஹி விஶ்ணுபக்தம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.2௦)
ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(யமதர்மராஜன் தனது யமதூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தமது வர்ணத்தின் கடமைகளிலிருந்து பிறழாதவரோ, எவர் தமது நண்பர் மற்றும் பகைவரிடத்தில் சமனோக்குடையவரோ, எவர் எதையும் (மற்றவரிடமிருந்து களவு வழியில்) பறிக்காமலும், மற்றுயிரைத் துன்புறுத்தாமலும், (இன்பமாயினும், துன்பமாயினும்) எல்லா காலங்களிலும் நிலையான அறிவு படைத்தவரோ, அவரை பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனாக அறிவீர்களாக.

விமலமதிராமத்ஸர பிரஶாந்த:
ஸுசிசரிதோSகிலஸத்த்வமித்ரபூத: |
ப்ரியஹிதவசனோSஸ்தமானமாயோ வஸதி
ஸதா ஹ்ருதி தஸ்ய வாஸுதேவ: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.24)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(யமதர்மராஜன் தனது யம தூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தூய்மையான மனதுடையவரோ, வன்மம் அற்றவரோ, அமைதியான உள்ளம் கொண்டவரோ, அப்பழுக்கற்ற குணமுடையவரோ, அனைத்துயிர்களுக்கும் நண்பரோ, அனைத்துயிர்களுக்கும் இன்பமும், நன்மையையும் தரும் மொழிகளை கூறுபவரோ, அகந்தையும், மமதையும், மாயையும் அற்றவரோ அவரது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ வாசுதேவர் வசிக்கின்றார்.

வஸதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மின்
பவதி புமாஜ்ஜகதோSஸ்ய ஸௌம்யரூப: |
க்ஷிதிரஸமதிரம்யமாத்மனோSந்த
கதயதி சாருதயைவ சாலபோத || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.25)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவ்வாறு சால மரத்தின் இளமையானது அதனுள்ளே நிரம்பியிருக்கும் சாற்றினை பறைசாற்றுகின்றதோ, அதைப்போலவே அனைவருக்கும் பிரியமான ஒருவர், தனது மனத்தினுள் நித்தியமான பகவான் ஸ்ரீ விஶ்ணு வசிப்பதை பறைசாற்றுகிறார்.

சகலமிதமஹம் ச வாஸுதேவ
பரமபுமான்பரமேஸ்வர: ஸ ஏக |
இதி மதிரசலா பவத்யனந்தே
ஹ்ருதயகதே வ்ரஜ தான்விஹாய தூராத் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரொருவர் பரமபுருஶரும், அனைத்தையும் ஆள்பவருமான பகவான் ஸ்ரீ வாசுதேவரே இந்த உலகம் அனைத்துமாக இருப்பதை தமது தூய அறிவால் உணர்ந்து, தமது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ அனந்தரை நிலைநிறுத்தியவரோ அவரை விட்டு நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

யமநியமவிதூதகல்மஶானாமனுதினமச்யுதஸக்தமானஸானாம் |
அபகதமதமானமத்ஸரானாம் வ்ரஜ பட தூரதரேன மானவானாம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.26)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(யம) தூதர்களே!!! எவரொருவரின் குற்றங்கள் மனம் மற்றும் புலனடக்கத்தின் மூலம் நீங்கிவிட்டனவோ, எவரொருவர் எப்பொழுதும் பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலை நிறுத்தியவரோ, எவரொருவர் மமதை, அகந்தை மற்றும் வன்மங்கள் அழியபெற்றவரோ அத்தகைய மனிதரிடமிருந்து விலகியே இருங்கள்.

இத்யாதிவசனைர்வைஷ்ணவலக்ஷணஸ்யைவம்பிரகாரத்வாச்ச ஹிம்ஸாதிரஹிதேன விஶ்ணோ: ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி |

இந்த புராண வாக்கியங்களிலிருந்து, மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் இல்லாமல் இருத்தலும், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை போற்றுவது, தொழுவது போன்ற  நற்செயல்களைப் புரிவதுமே ஒரு வைணவனுக்கு (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனுக்கு) அடையாளம் என்பது விளங்கும்.

ஶ்ரத்தயா தேயம் அஶ்ரத்தயா ()தேயம் (தைத்ரீய உபநிஶத் 1.11.3)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு தானத்தையும் ஈடுபாட்டுடன் கொடுக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த தானத்தையும் கொடுக்கக்கூடாது.

ஶ்ரத்தயாக்னி மித்த்யதே அர்ப்பணிப்பாலேயே (ஈடுபாட்டாலேயே) நெருப்பானது சுடர்விடுகின்றது

இத்யாதிஸ்ருதே: இது போன்ற வேத வாக்கியங்களாலும்,

ஶ்ரத்தாபூதம் வதான்யஸ்ய ஹதமஶ்ரத்தயேதரத் |
கொடையளிப்பவர் (கொடையளிப்பதில் உள்ள) ஈடுபாட்டாலேயே தூய்மையடைகிறார். ஈடுபாடில்லாமல் (கொடையளித்தால், அதனால் நற்பயன்கள் ஏதும் கிட்டாமல்) நஷ்டமடைகிறார்.

இமம் ஸ்தவமதீயான ஶ்ரத்தா பக்தி ஸமன்வித: (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 132)
ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமத்தின் ஃபல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது:
(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமமென்னும்) இந்த துதியை ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் படிப்பவர் (ஆத்ம சுகம், மன அமைதி, திருமகளின் கருணை, தைரியம், வேத அறிவு மற்றும் மேன்மையை அடைகின்றனர்)

ஶ்ரோத்ரியம் ஶ்ராத்தமதீதமவ்ரதமதக்ஷிணம் யஞ்யமன்ரித்விஜாஹுதம் |
ஶ்ரத்தயா தத்தமஸம்ஸ்க்ருதம் ஹவிர்பாகாடேதே தவ தைத்யஸத்தம ||
ஹே அசுரர்களின் தலைவனே!!! தகுந்த வேத மந்திரங்கள் இன்றி நிறைவேற்றப்படும் நீத்தார் கடனும், தவமின்றி கற்கப்படும் கல்வியும், தக்க காணிக்கையின்றி நிறைவேற்றப்படும் வேள்வியும், தகுந்த ரிக் வேத வல்லுனர்கள் இன்றி உண்டாக்கப்படும் வேள்வித்தீயும், ஈடுபாடின்றிக் கொடுக்கப்படும் கொடையும், தூய்மையின்றி வேள்வித்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும், ஆகிய இந்த ஆறும் உன்னைச் சேர்ந்தவையாகும்.

புண்யம் மத்த்வேஶிணா யச்ச மத்பக்தத்வேஶிணாம் ததா |
க்ரயவிக்ரயஸக்தானா புண்ய யச்சாக்னிஹோத்ரிணாம் ||
ரத்தயா ச யத்தான யஜதாம் தததா ததா |
தத்ஸர்வம் தவ தைத்யேந்தர மத்ப்ரஸாதாத்பவிஶ்யதி ||
ஓ அசுரர்களின் தலைவனே!!! என்னையும், எனது பக்தர்களையும் வெறுப்போர் செய்யும் நற்செயல்களின் பலனும், செய்முறையின்றித் தவறுதலாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் பலனும், ஈடுபாடின்றி செய்யப்படும் வேள்வி மற்றும் தானத்தின் பலனும் எனது அருளால் உன்னை வந்து அடையும்.

(மேற்கண்ட மூன்று ஸ்லோகங்களின் தேர்ந்த பொருள்: மேற்கூறிய செயல்கள் யாவும் அசுரத்தன்மை வாய்ந்தவையாகும். இவ்வாறு தவறாகச் செய்வதால் நமக்கு நற்பயன் எதுவும் கிட்டாது)

ஶ்ராத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்த க்ருதம் ச யத் |
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || (ஸ்ரீ பகவத்கீதை 17.28)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
எவ்வித ஈடுபாடுமின்றி (அசிரத்தையுடன்) செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும், 'அஸத்' எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா, இம்மையிலும் பயன்படா.

இத்யாதிஸ்ம்ருதிபிஸ்ச ஶ்ரத்தயா ஸ்துதிநமஸ்காராதி கர்த்தவ்யம் அஶ்ரத்தயா ந கர்த்தவ்யம் |
மேற்கண்ட ஸ்ம்ருதி வாக்கியங்களிலிருந்து (நாம் அறியவேண்டியது என்னவெனில், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) போற்றுவதும், தொழுவதும் ஈடுபாட்டுடன் செய்யப்படவேண்டும். ஈடுபாடின்றி செய்வது கூடாது.

ஓம்தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: | (ஸ்ரீ பகவத்கீதை 17.23)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
"ஓம் தத் ஸத்" என்ற மும்மைப் பெயர் ப்ரஹ்மத்தைக் குறிப்பதென்பர்.

இதி பகவத்வசனாத் ஸ்துதிநமஸ்காராதிகம் கர்மாஸாத்விகம் விகுநமபி ஶ்ரத்தாபூர்வகம் ப்ரஹ்மனோSபிதானத்ரயப்ரயோகேன ஸகுணம் ஸாத்விகம் ஸம்பாதிதம் பவதி |
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த கீதை ஸ்லோகத்திலிருந்து, "பகவானைப் போற்றுவது, திருவடித்தொழுவது போன்ற செயல்களை தூய்மையற்ற மனதுடனோ, அல்லது குறைபாடுகளுடனோ செய்தாலும், ப்ரஹ்மத்தின் இந்த (ஓம், தத், ஸத் என்ற) மூன்று பெயர்களை ஈடுபாட்டுடன் ஓதுவதன் மூலம் ஒருவர் நற்குணங்களை அடைகிறார்" என்பது புலனாகிறது.

ஆத்மானம் விஶ்ணும் த்யாத்வாS(அ)ர்ச்சன ஸ்துதி நமஸ்காராதி கர்த்தவ்யம் |
பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு, போற்றுதல்களும், வழிபாடும், திருவடித்தொழுதலும் ஆத்மார்த்தமாகவே (அவரை நமது ஆத்மாவின் உருவமாகவே எண்ணிப்) புரிதல் வேண்டும்.

நாவிஶ்ணு: கீர்த்தயேத்விஶ்ணும் நாவிஶ்ணும் விஶ்ணுமர்ச்சயேத் |
நாவிஶ்ணு: ஸம்ஸ்மரேத் விஶ்ணு நாவிஶ்ணுர்விஶ்ணுமாப்னுயாத் ||
(ஸ்ரீ மஹாபாரதம்)
இதி மஹாபாரதே கர்மகாண்டே |
ஸ்ரீ மஹாபாரதம் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது:
நாம் விஶ்ணுவாக மாறாது (நமக்குள் இருக்கும் ஆத்மா, பரமாத்மாவான விஶ்ணுவே என்று உணராது) பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் புகழ் மாலைகளைப் பாடவேண்டாம், அவருக்கு வழிபாடுகள் செய்யவேண்டாம், நாமே விஶ்ணு என்று உணராது அவரைப் பற்றி நினைக்கவேண்டாம். நாம் விஶ்ணுவாக நம்மை உணராவிடில், நாம் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை அடைய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக