புதன், மே 02, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 43

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஶ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.


ஶ்ரூயதாம் தர்மஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம் |
ஆத்மன: ப்ரதிகூலானி பரேஶாம் ந ஸமாசரேத்’ || (விஶ்ணுதர்மம் 3.255.44)

விஶ்ணுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
அனைவரும் தர்மத்தின் சாரத்தை கேளுங்கள்; கேட்டதை உங்கள் உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்துங்கள் – எந்த செயல் நமக்கு விரோதமானதோ, எதிரிடையானதோ, அதை (அந்த செயலை) மற்றவருக்கு எதிராக நாம் செய்தல் கூடாது.

‘ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோSர்ஜுன |
ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகி பரமோ மத:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.32)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்மசமத்துவம் பற்றி சம பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

‘நிர்குண: பரமாத்மாத்ர தேஹே வ்யாப்ய வ்யவஸ்தித: |
தமஹம் ஞானவிஞ்யேயம் நாவமன்யே ந லங்கயே’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 8)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதிலும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன்.
‘யத்யாகமைர்ன விந்தேயம் தமஹம் பூதபாவனம் |
க்ரமேயம் த்வாம் கிரிம் சேமம் ஹனூமானிவ சாகரம்’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 9)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை (பரமாத்மாவை) நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப்போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டி இருப்பேன்.


‘பத்தவைராணி பூதானி த்வேஶம் குர்வந்தி சேத்தத: |
ஶோச்யான்யஹோSதிமோஹேன வ்யாப்தானீதி மநீஶிணாம் ||
ஏதே பின்னத்ருஶா தைத்யா விகல்பா: கதிதா மயா |
க்ருத்வாSப்யுபகமம் தத்ர சக்ஷேப ஶ்ரூயதா மம ||
விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |
த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||
ஸமுத்ஸ்ருஜ்யாஸுரம் பாவம் தஸ்மாத்யூயம் ததா வயம் |

ததா யத்னம் கரிஶ்யாமோ யதா ப்ராப்ஸ்யாம நிர்வ்ருதிம் ||’  
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.82 – 85)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): பிறருடன் பகைமை பாராட்டி அவரை வெறுக்கும் மனிதரைக்கண்டு அறிஞர்கள் "!! இவர்கள் இவ்வாறு மோக வசப்பட்டுள்ளனரே!" என்று வருந்துவர். ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)! தன்னிலிருந்து பிறரை வேறொன்றாகப் பார்ப்பவரே வெறுப்பையும், பகைமையையும் அடைகின்றனர். எனவே, அவற்றை (வெறுப்பையும், பகைமையையும்) விட்டொழிக்க வேண்டும். நானறிந்த நல்லனவற்றை உங்களுக்குக் கூறுகின்றேன், கேளுங்கள். இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் விரிவாக்கமாகும். இங்கு அவரைத்தவிர வேறொன்றும் இல்லை.  அறிவுடையோர் இங்கு அனைத்தையும் தமது ஆத்மாவின் வெளிப்பாடாகவே, வேறுபாடின்றி காண முயல வேண்டும். எனவே, நாம் நமது அஸுர தன்மையை விட்டொழித்து, இவ்வாறு (வேறுபாடின்றி காண்பதற்கு) முயற்சி செய்ய வேண்டும். இதுவே, நமக்கு அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

ஸர்வத்ர தைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய|| (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)!! அனைத்தையும் ஒன்றாகவே (வேறுபாடுகள், வெறுப்புக்கள் இன்றி) பார்க்கப் பழகுங்கள். இதுவே பகவான் ஸ்ரீ அச்யுதருக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.

ந மந்த்ராதிக்ருதம் தாத ந ச நைஸர்கிகோ மம |
ப்ரபாவ ஏ ஸாமான்யோ யஸ்ய யஸ்யாச்யுதோ ஹ்ருதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.4)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
(ப்ரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகசிபுவிடம் கூறினான்) தந்தையே!! இது (தன்னைக் கொல்ல தன் தந்தை ஹிரண்யகசிபு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது) மந்திர சக்தியினாலும் நிகழவில்லை. இது என்னிடமுள்ள இயற்கையான சக்தியினாலும் அல்ல. பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலைநிறுத்தியவருக்கு இவை அனைத்தும் மிக எளிதானதாகும்.

அன்யேஶாம் யோ ந பாபானி சிந்தயத்யாத்மனோ யதா |
தஸ்ய பாபாகமஸ்தாத ஹேத்வபாவான்ன வித்யதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.5)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, அவர்களுக்குக் கேடொன்றும் நினைக்காதவனைப் பாவங்கள் தீண்டுவதில்லை. (துன்பத்தை விளைவிக்கும்) மூல காரணம் இல்லாததால் அவனுக்குத் துன்பங்களும் விளைவதில்லை.

கர்மணா மனஸா வாசா பரபீடாம் கரோதி ய: |
தத்பீஜம் ஜன்ம ஃபலதி ப்ரபூதம் தஸ்ய சாஶுபம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.6)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
மனதாலும், செயலாலும், வாக்காலும் பிறருக்குத் துன்பம் இழைப்பவன், அந்த பாபமென்னும் விதையின் பயனாய் மறுபிறப்பு மற்றும் பெருந்துன்பன்களைப் பயனாய் (பழமாய்) அடைகிறான்.

சோஹம் ந பாபமிச்சாமி ந கரோமி வதாமி வா |
சிந்தயன்ஸர்வபூதஸ்தமாத்மன்யபி ச கேவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.7)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
நான் எவருக்கும் துன்பம் இழைப்பதில்லை. அவ்வாறு பேசுவது கூட கிடையாது. நான் எப்பொழுதும், என் நெஞ்சினுள்ளும் அனைத்துயிர்களுக்குள்ளும்  வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கேசவனைத் த்யானிக்கின்றேன்.

ரீரம் மானஸம் துக்கம் தைவம் பூதபவம் ததா |
ஸர்வத்ர ஸுபசித்தஸ்ய தஸ்ய மே ஜாயேத குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.8)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
இவ்வாறு அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் எனக்கு சரீரம், மனம், வாக்கு ஆகியவற்றுக்கு தெய்வங்களாலோ, இயற்கையாலோ என்ன துன்பம் வரக்கூடும்?

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறோம். இவை தாபத் த்ரயங்கள் என்று அழைக்கப்படும். அவையாவன ஆதி தைவிகம் (தேவர்களால் வரும் துன்பங்கள்), ஆதி பௌதிகம் (இயற்கை உபாதைகள்), ஆத்யாத்மிகம் (நமது பூர்வ கர்ம வினைகளால் ஏற்படுவன).

ஏவம் ஸர்வேஶு பூதேஶு பக்திரவ்யபிசாரிணீ |
கர்தவ்யா பண்டிதைர்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.9)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
இவ்வாறு, பகவான் ஸ்ரீ ஹரியானவர் எவ்வுயிரிலும் நிறைந்துள்ளார் என்பதை உணர்ந்து கற்றறிந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

சாம சோபப்ரதானம் ச பேததண்டௌ ததாபரௌ |
உபாயா: கதிதா: ஸர்வே மித்ராதினாம் ச ஸாதனே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.35)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
நண்பர்களையும், எதிரிகளையும் அடக்கியாள்வதற்கு (எனது குருமார்கள்) நான்கு உபாயங்களைக் கூறினார்கள். அவையாவன - சாம (நயம்பட பேசுதல்), பேத (இருவரிடையே கலகத்தை உண்டாக்குதல்), தான (பொருள், பணம் முதலியவற்றால் வசப்படுத்துதல்), தண்டம் (வலிமையால் அடக்குதல்).

தானேவாஹம் ந பஶ்யாமி மித்ராதீம்ஸ்தாத மா க்ருத: |
ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் பிரயோஜனம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.36)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ஆனால் தந்தையே, தாங்கள் சினமடையாது கேட்கவேண்டுகிறேன். எனக்கு நண்பர்கள் என்றோ எதிரிகள் என்றோ யாரும் தெரிவதில்லை (எந்த பாகுபாடும் இல்லை என்று பொருள்). ஹே பெருந்தோளுடையோரே!! எப்பொழுது (நண்பனையும், பகைவனையும் அடக்கியாள வேண்டும் என்ற) அடையவேண்டியது ஒன்றும் இல்லையோ, அப்பொழுது அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |
பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.37)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
தந்தையே!! ஜகன்னாதனான பகவான் ஸ்ரீ கோவிந்தன் அனைத்துயிர்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்தும், இந்த பிரபஞ்சமாகவே வ்யாபித்தும் இருக்கையில், (சிலரை) நண்பனென்றும், (சிலரை) பகைவரென்றும் கருதுவது பயனற்றது.

ஜடானாமவிவேகானாமஸுரானாமபி ப்ரபோ |
பாக்யபோஜ்யானி ராஜ்யானி சந்த்யனீதிமதாமபி ||
தஸ்மாத்யதேத புண்யேஶு ய இச்சேன்மஹதீம் ஶ்ரியம் |
யதிதவ்யம் ஸமத்வே ச நிர்வாணமபி சேச்சதா || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.44-45)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
பிரபுவே (தந்தையே)!!! அரசாளும் பேறு அறிவிலிகளுக்கும், கோழைகளுக்கும், அரசாளத் தகுதியற்றவருக்கும் கூட அவர்களின் முன்ஜென்ம கர்மவினைக்கேற்பக் கிடைக்கக் காண்கிறோம். எனவே, புகழையும், பேற்றையும் விழைபவர்கள் நற்செயல்களைப் புரியவேண்டும். (இந்த சம்ஸாரத் தளையிலிருந்து) முக்தியை விழைபவர்கள் அனைத்துயிர்களையும் (தன்னுயிர்போல) சமநோக்குடன் பார்க்க வேண்டும்.

தேவா மனுஷ்யா: பவ: பக்ஷிவ்ருக்ஷசரீஸ்ருபா:  |
ரூபமேததனந்தஸ்ய விஶ்ணோர்பின்னமிவ ஸ்திதம் ||
ஏதத் விஜானதா ஸர்வம் ஜகத் ஸ்தாவரஜங்கமம் |
       த்ரஶ்டவ்யமாத்மவத் விஶ்ணுர்யதோSயம் விஶ்வரூபத்ருக் ||
ஏவம் ஞாதே ஸ பகவானனாதி: பரமேஶ்வர: |
       ப்ரஸீதத்யச்யுதஸ்தஸ்மின் ப்ரஸன்னே க்லேஶஸம்க்ஷய: ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.46-48)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
தேவர்கள், மனிதர், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்பு முதலான அனைத்தும் எல்லையற்ற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமாகும். அதுவே (அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமே) இங்கு வெவ்வேறாகத் தெரிகின்றது என்பதை அறிபவன் இங்குள்ள அசையும், மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் தனக்கு நிகராகவே பார்க்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தையே தன் உருவமாகக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீ விஶ்ணுவேயாகும். இவ்வாறு அறிவதன் மூலம் தனக்கொரு தொடக்கம் இல்லாதவரும், அழிவற்றவருமான பரமேஸ்வரன் மனமகிழ்கிறார். அவர் மனமகிழ்ந்தால் நமது அனைத்துத் துன்பங்களும் அழிந்துவிடும்.

பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே |
       வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: ||
(ஸ்ரீ பகவத்கீதை 7.19)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மஹாத்மா கிடைத்தற்கரியவன்.

இத்யாதிவசனைச்ச | இத்தகைய வாக்கியங்களால் இதுவே (பகவான் விஶ்வம் என்று அழைக்கப்படுகிறார்) என்பது புலனாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக