புதன், மே 09, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 47

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |

பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஶட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: 
||

இவற்றில் மேலும் சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் அளிக்கும் உரையை இன்று பார்க்கலாம்.

3. ஓம் வட்காராய நம:
யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்து ட் வேள்விகளில் "ட்" என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ட்கார: அவரே "ட்காரர்" ஆவார் |

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே 'ட்' என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் 'ட்கார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை 1.7.4)
வேள்விகள் விஶ்ணுவேயாகும்.

இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வட்கார: |
இந்த ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில் "ட்" என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வட்காரமாகும் (வேள்விகள் விஶ்ணுவே என்பதால், விஶ்ணு ட்காரர் எனப்படுகிறார்).

யேன வட்காராதிமந்த்ராத்மனா வா தேவான்ப்ரீனயதி ஸ வட்கார: | தேவதா வா, 'ப்ரஜாபதிஸ்ச ட்காரஸ்ச' இதி ஸ்ருதே: |
மேற்கண்ட ஸ்ருதிவாக்கியங்களின்படி, ட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர் (அந்த தெய்வமே) ட்காரர்.

சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |
ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||
நான்கு (ஶ்ராவய), நான்கு (அஸ்து ஸ்ரௌட்), இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (ட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால் எவரைக்குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம் மகிழ்ச்சி அடையட்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |
இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு 'ட்கார' என்று அழைக்கப்படுகிறார்.

4. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:
பூதம் கடந்த காலம் பவ்யம் எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபு: எவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ)  பூதபவ்யபவத்ப்ரபு: அவர் "பூதபவ்யபவத்ப்ரபு" ஆவார்.

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் "பூதபவ்யபவத்ப்ரபு:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ரப்ரதியோகிகமைஶ்வர்யமஸ்யேதி ப்ரபுத்வம் |
 (ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.

5. ஓம் பூதக்ருதே நம:
ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் 'பூதக்ருத்' என்று அழைக்கப்படுகிறார்.||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் 'பூதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் 'பூதக்ருத்' என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் 'பூதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக