வியாழன், மே 17, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 49

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |

பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஶட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: 
  
||

1. ஓம் விஶ்வஸ்மை நம:
விஶ்வஸ்ய ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

2. ஓம் விஶ்ணவே நம:
வேவேஷ்டி வ்யாப்னோதீதி விஶ்ணு: |

'வேவேஷ்டி' அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. ஓம் வட்காராய நம:
யதுத்தேஶேனாத்வரே ட் க்ரியதே ட்கார: |

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே 'ட்' என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் 'ட்கார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

4. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:
பூதம் பவ்யம் பூதபவ்யபவந்தி தேஶாம் ப்ரபு: பூதபவ்யபவத்ப்ரபு: .

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் "பூதபவ்யபவத்ப்ரபு:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
5. ஓம் பூதக்ருதே நம:
ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய விரிஞ்சிரூபேண பூதானி கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் 'பூதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய ருத்ராத்மனா பூதானி க்ருந்ததி க்ருணோதி ஹிநஸ்தீதி பூதக்ருத் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் 'பூதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

6. ஓம் பூதப்ருதே நம:
ஸத்வகுணமதிஷ்டாய பூதானி பிபர்த்தி பாலயதி தாரயதி போஶயதீதி வா பூதப்ருத் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்துகாத்துதாங்கிஊட்டமளிப்பதால் 'பூதப்ருத்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

7. ஓம் பாவாய நம:
ப்ரபஞ்சரூபேண பவதீதி கேவலம் பவதீத்யேவ வா பாவ: |பவனம் பாவ: ஸத்தாத்மகோ வா |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாகஅவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் "பாவ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

8. ஓம் பூதாத்மனே நம:
பூதானாமாத்மாந்தர்யாமீதி பூதாத்மா|

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

9. ஓம் பூதபாவனாய நம:
பூதானி பாவயதீதி ஜனயதி வர்த்தயதீதி வா பூதபாவன: |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால்அதாவது பிறப்பித்துவளர்ப்பதால் "பூதபாவனஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக