வெள்ளி, மே 25, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 53

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |

நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||


இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

18. யோக: 19. யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

இவற்றில் ஒரு சில திருநாமங்களுக்கு ஆதிஶங்கர பகவத்பாதரின் விளக்க உரையை (பாஶ்யத்தை) இன்று காணலாம்.


20. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் 'ப்ரதானம்' என்றால் ப்ரக்ருதிர்மாயா 'ப்ரக்ருதி' அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ 'புருஶ' என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வர: இவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் 'ப்ரதானபுருஶேஶ்வர:' என்று அழைக்கப்படுகிறார் |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் "ப்ரதானபுருஶேஶ்வர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.

21. ஓம் நாரஸிம்ஹவபுஶே நம:
நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |

(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் 'நாரஸிம்ஹவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22. ஓம் ஸ்ரீமதே நம:
யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் அவர் ஸ்ரீமான் 'ஸ்ரீமான்' என்று அழைக்கப்படுகிறார் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
திருவண்பரிசாரம் திருவாழ்மார்பர்
மற்றவர்களுக்கு 'ஸ்ரீமான்' என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான 'திருவாழ்மார்பர்' என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக