செவ்வாய், மே 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 54


23. ஓம் கேவாய நம:
அபிரூபா: மிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால் அவர் கே: 'கேசவன்' என்று அழைக்கப்படுகிறார்|

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)
பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
கேச என்ற சொல்லின் பின்னே வரும்:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.

யத்வா அல்லது கஸ்ச '' என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச '' என்று அழைக்கப்படும் விஶ்ணு ஸ்ச 'ஈசன்' என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶே எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ அவர் கே: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் 'கேசவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
1.   அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
2.   ++ஈஶ+(வஷேன, வர்தந்தே) = கேஶவ:

கேஶிவதாத்வா 'கேசி' என்ற அசுரனைக் கொன்றபடியால் கே: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

'கேசி' என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

யஸ்மாத்வயை துஶ்டாத்மா ஹத: கேசீ ஜனார்தன |
தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||' (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)
இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |
ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:
ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புணர்ச்சி விதிகளின்படி கேசி + , கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.

முன்பே கூறியிருந்தபடி ஆச்சார்யாள் மூன்று விளக்கங்களை அளிக்கிறார். பின்னர் வரும் 'கேசவ' திருநாமங்களுக்கும் இங்குள்ள சில உரைகளை மீண்டும் அளிக்கிறார். இதை நாம் புனருக்தி தோஷமாகக் கொள்ள இயலாது. முதலாம் உரையை  இந்த திருநாமத்திற்கும், மற்றவைகளை பின்வரும் திருநாமங்களுக்கும் பொருளாகக் கொள்ளவேண்டும்.  

24. ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் புருஶர்களில் உத்தம: தலைசிறந்தவர் புருஶோத்தம: 'புருஷோத்தம:' என்று அழைக்கப்படுகிறார் |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'புருஶோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் 'ந நிர்த்தாரணே' (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.
  
ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத்வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |
அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக