புதன், மே 16, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 48

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |

பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஶட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: 
 
||

இவற்றில் முந்தைய பதிவில் 'பூதக்ருத்' என்ற திருநாமம் வரை ஆச்சார்யாளின் உரையை அறிந்தோம். இன்றைய பதிவில் மீதமுள்ள 4 திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் அளிக்கும் உரையை பார்க்கலாம்.

6. ஓம் பூதப்ருதே நம:
ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்து, பாலயதி காத்து, தாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் 'பூதப்ருத்' என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் 'பூதப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

7. ஓம் பாவாய நம:
ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: "பாவ:" என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ:பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் "பாவ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

8. ஓம் பூதாத்மனே நம:
பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா பூதாத்மா என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால்பூதாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)
உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.

இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.

9. ஓம் பூதபாவனாய நம:
பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: "பூதபாவன" என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் "பூதபாவன" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக