செவ்வாய், மே 08, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 46


1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |


பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் 'விஶ்ணு:' என்ற இரண்டாவது திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் உரையை இன்று பார்க்கலாம்.


2. ஓம் விஶ்ணவே நம:
தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ 'விஶ்ணு:' இதி |
பிறகு, 'அந்த விஶ்வம் யார்?' என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) 'விஶ்ணு' என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.

ததா ச ரிக்வேதே - ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமு ஸ்தோதார: பூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன | ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே'

இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம் ஸம்யக்ஞான-ப்ராப்தயே விஹிதம் |
மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.

தமேவ ஸ்தோதார: புராணம் யதா ஞானேன ஸத்யஸ்ய கர்ப்பம் ஜன்மஸமாப்திம் குருத |
ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்று விடுதலைப் பெறுங்கள்).

ஜானந்த: ஆஅஸ்ய விஶ்ணோ: நாமாபி ஆவதத அன்யே வதந்து மா வா ஹே விஶ்ணோ வயம் தே ஸுமதிம் சோபனம் மஹ: பஜாமஹே இதி ஶ்ருதேர் அபிப்ராய: |
ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.

வேவேஶ்டி வ்யாப்னோதீதி 'வேவேஷ்டி' அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு: திருநாமம் "விஶ்ணு" வாகும் விஶ்வ்யாப்யத்யபிதாயினோ 'விஶ்' என்ற வேர்சொல்லின் பொருள் "எங்கும் பரவியிருத்தலாகும்" நுக்ப்ரத்யயான்தஸ்ய அதனுடன் "நுக்" என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணு ரிதி 'விஶ்ணு' என்ற பெயர் உருவாகிறது. |

'வேவேஶ்டி' அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |
இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.

வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |
ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.

க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||
ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)
இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யச்ச கிஞ்சித் ஜகத் ர்வம் த்ருஷ்யதே ஶ்ரூயதேSபி வா |
அந்தர்பஹிச்ச தத் ர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||
நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.

இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2) 
இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி'
அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.

இத்யாத்மபோதோபநிதி (1)
இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது. 

விதேர்வா 'விஶ்' என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் "உட்புகுதலாகும்" நுக்ப்ரத்யயாந்தஸ்ய அதனுடன் "நுக்" என்ற விகுதி ரூபம் விஶ்ணுர் இதி 'விஶ்ணு' என்ற பெயர் உருவாகிறது |

அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் 'விஶ்ணு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்ய ஶ  க்த்யா மஹாத்மன: |
தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோ: ப்ரவேநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. 'விஶ்' என்ற வேர்சொல்லிற்கு 'உட்புகுதல்' என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீ விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. தமிழில் கிரந்தம் கலந்து எழுதுவதை தமிழ்மொழி பகைவர் அன்றி வேறொருவர் செய்ய மாட்டார்

    பதிலளிநீக்கு