சனி, மே 19, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 50

2.   பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |

அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

10. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி: |
13. அவ்யய: 14. புருஶ: 15. சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச ||

10. ஓம் பூதாத்மனே நம:
எட்டாவது திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் நான்காவது ப, "பாஸ்கரன்" என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்). இந்த திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் முதல் ப, "பூ" என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்).

பூதக்ருதாதிபிர்குணதந்த்ரத்வம் பூதக்ருத் (ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர்) போன்ற திருநாமங்களில் அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவர் ப்ராப்தம் என்ற குற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ப்ரதிஷித்யதே போக்குகிறார் பூதாத்மா இதி தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால்).

பூத தூய்மையான ஆத்மா ஆத்மா யஸ்ய யவரோ பூதாத்மா அவரே "பூதாத்மா", கர்மதாராயோ வா (படைப்பது முதலான அனைத்து செயல்களையும்) கடமையாகச் செய்கிறார் (எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை).

ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்) போக்குகிறார். பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர், அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர்.  அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார். எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

"கேவலோ நிர்குணஸ்ச" (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)
(அவர்) தனிப்பட்டவர், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு, ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

குணோபராக: ச்வேச்சாத: புருஶஸ்யேதி கல்ப்யதே |
அந்த புருஶருக்கு (ஆத்மாவிற்கு), குணங்களுடன் தொடர்பு அவரது இச்சையால் உருவாகிறது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

11. ஓம் பரமாத்மனே நம:
பரமஸ்சாஸாவாத்மா சேதி எவரொருவர் அனைத்திற்கும் மேம்பட்டவரோ மற்றும் ஆத்மாவானவரோ பரமாத்மா அவரே பரமாத்மா. கார்யகாரணவிலக்ஷணோ செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு நித்ய எப்பொழுதும் சுத்த தூய்மையாகவும் புத்த அறிவுடையவராகவும் முக்த பற்றுதலின்றியும் ஸ்வபாவ: இயற்கையாக உடையவர் |

அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் 'பரமாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும், அறிவுடையவராகவும், பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர் (நமக்கு இவை முயற்சியால் தான் கிட்டும், பகவானுக்கு இவை இயற்கைத் தன்மையாகும்).

12. ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
முக்தானாம் முக்தி அடைந்தவர்களுக்கு பரமா ப்ரக்ருஷ்டா (பரமா என்றால்) மிகவும் மேலான கதிர்கந்த்வ்யா (கதி என்றால்) அடையக்கூடிய இலக்கு தேவதா எந்த தெய்வமோ புனராவ்ருத்த்யசம்பவாத்தத்கதஸ்யேதி எவரை ஒருமுறை சென்று அடைந்தால் மீண்டு வருவதென்பது இல்லையோ முக்தானாம் பரமா கதி: அவரே முக்தானாம் பரமா கதி |

எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலான இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம வித்யதே ||' (ஸ்ரீமத் பகவத்கீதை 8.16)
குந்தி மகனே!!! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

இதி பகவத்வசனம் | இவ்வாறு, பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்.

13. ஓம் அவ்யயாய நம:
ந வ்யேதி பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் நாஸ்ய வ்யயோ விநாஷோ விகாரோ அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் வா வித்யத இதி அவ்யய: அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்று அழைக்கப்படுகிறார் |

பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
.
'அஜரோSமரோSவ்யய:'
"மூப்பற்றவர், இறவாதவர், அழிவில்லாதவர்"

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக