புதன், மே 23, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 52


3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

18. யோக: 19. யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

18. ஓம் யோகாய நம:
ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |
ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||'
மனம் உட்பட அனைத்து அறிவுப்புலன்களையும் (ஞானேந்த்ரியங்கள்) ஒடுக்கி, க்ஷேத்ரஞ்யான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி இருத்தலே யோகம் எனப்படும்.

தத் இவ்வாறு (மனம், புலன்களை அடக்கி யோகத்தில் ஒன்றுவதன் மூலம்) அவாப்யதயா அடையப்படுவதால் யோக: அவர் யோக:’ என்று அழைக்கப்படுகிறார் |

மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் "யோக:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

19. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:
யோகம் யோகத்தை விதந்தி கற்று விசாரயந்தி ஆராய்ந்து ஜானந்தி அறிந்து லபந்த இதி வா அதை அடைந்த யோகவிதஸ்தேஶாம் யோகத்தை உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளின் நேதா தலைவர் ஞாநினாம் (அத்தகைய) அறிவிற்சிறந்த யோகிகளின் யோகக்ஷேமவஹனாதிநேதி நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை நிர்வகித்து அவர்களை வழிநடத்துவதால் யோகவிதாம் நேதா அவர் "யோகவிதாம் நேதா" என்று அழைக்கப்படுகிறார் |

யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் "யோகவிதாம் நேதா" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தேஶாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 9.22)
ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:
அந்த நித்திய யோகிகளின் நன்மை, தீமைகளை நான் பொறுப்பேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக