திங்கள், மே 21, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 51


14. ஓம் புருஶாய நம:
'புருஶ:' என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை "புனருக்தி" தோஷமாக கருத இயலாது.

புரம் ஶரீரம் "புரம்" என்றால் உடல் தஸ்மின் அதற்குள் ஶேதே (அந்தராத்மாவாக) சயனித்திருப்பதால் புருஶ: அவர் புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |

பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நவத்வாரம் புரம் புண்யமேதைர்பாவை: ஸமன்விதம் |
வ்யாப்ய ஶேதே மஹாத்மா யஸ்தஸ்மாத் புருஶ உச்யதே ||' (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 210|37)

அந்த மஹாத்மாவானவர் ஒன்பது ஓட்டைகளை உடைய இந்த உடலெங்கும் நிறைந்து, சயனித்திருக்கிறார். எனவே, அவர் 'புருஶ' என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யத்வா அல்லது அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு ஆஸீத் இருத்தல் புரா பூர்வமேவேதி புரா என்றால் அனைத்திற்கும் முன்னமிருந்தே விக்ரஹம் க்ருத்வா இணைத்துப் பார்த்தால் வ்யுத்பாதித: கிடைக்கும் புருஶ: அவர் புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் 'புருஶ' என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பூர்வமேவாஹமிஹாஸமிதி தத் புருஶஸ்ய புருஶத்வம்'
நான் இங்கு முன்னமிருந்தே இருக்கிறேன். இதுவே, அந்த "புருஶரின்" இயல்பாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

அதவா அல்லது புருஶு புருஶு என்றால் பூரிஶு பல்வேறு உத்கர்ஶஶாலிஶு உயர்ந்த குணமுடைய ஸத்வேஶு ஜீவாத்மாக்களினுள்ளே ஸீததீதி இருப்பதால் புருஶ: பகவான்புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |

அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு ஃபலானி (கேட்பவர்க்குத் தகுந்தபடி) வெவ்வேறு பலன்களை ஸனோதி ததாதீதி சனோதி, அதாவது வாரி வழங்குபவர் வா என்பதால் புருஶ: பகவான்புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |
புரூனி நோதி = புருஶ:

புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு புவனானி உலகம் ஸம்ஹாரஸமயே (அவற்றை) அழிக்க வேண்டிய காலத்தில் ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா அவற்றை அழிப்பதால் புருஶ: பகவான்புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |
புரூனி + ஸ்யதி = புருஶ:

புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூர்ணத்வாத் தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும் பூரணாத்வா (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும் தனாத்வா நிலைத்து நிற்பதனாலும் புருஶ: பகவான்புருஶஎன்று அழைக்கப்படுகிறார் |

தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பூரணாத்ஸதனாச்சைவ ததோSஸௌ புருஷோத்தம:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.11)
நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் அவரே புருஷோத்தமராவார்.

இதி பஞ்சமவேதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

15. ஓம் ஸாக்ஷிணே நம:
ஸாக்ஷாதவ்யவதானேன "ஸாக்ஷாத்" என்றால் வேறு எவற்றின் துணையுமின்றி ஸ்வரூப போதேன தன்னுடைய இயற்கையான ஞானத்தால் (அறிவால்) ஈக்ஷதே பஶ்யதி உள்ளதை உள்ளவாறு காண்கிறார் ஸர்வமிதி அனைத்தையும் (அனைவரையும்ஸாக்ஷி அவர் ஸாக்ஷிஎன்று அழைக்கப்படுகிறார் |

வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் "ஸாக்ஷி" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு காண்பதற்கு கண்களின் துணை வேண்டும், கேட்பதற்கு காதுகள் வேண்டும். பகவானுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், அவருக்கு கண்களே இல்லையென்றோ, காதுகளே இல்லையென்றோ பொருள் அல்ல. அவர் ஞானத்தாலேயே அனைத்தையும் அறிவதால் அவருக்கு இவற்றின் துணை கொண்டு தான் காண வேண்டும் என்ற நியதி கிடையாது.

'ஸாக்ஷாத்த்ரஶ்டரி ஸம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 5.2.91)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
"ஸாக்ஷாத்" என்ற சொல், ஒரு வ்யக்தியைக் குறிக்கும் பொழுது, 'இணி' என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.
எனவே இந்த திருநாமத்தை நாமாவளியாகக் கூறும்பொழுது "ஓம் சாக்ஷிணே நம:" என்று "இணி" என்ற விகுதியுடன் கூட்டி உச்சரிக்கப்படுகிறது.

16. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
க்ஷேத்ரம் சரீரம் "க்ஷேத்ரம்" என்றால் இந்த உடலைக் குறிக்கும் ஜானாதீதி அறிகிறார் க்ஷேத்ரஜ்ஞ்ய அவர் க்ஷேத்ரஜ்ஞ்யஎன்று அழைக்கப்படுகிறார் |

இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் "க்ஷேத்ரஜ்ஞ" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஆதோSனுபஸர்கே க:’ (பாணினி சூத்ரம் 3.2.3)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஒரு சொல்) அகாரத்தில் / ஆகாரத்தில் முடிந்து, அதற்கு ஒரு வினைச்சொல் முன்னே இல்லாவிடில், "" என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.
க்ஷேத்ர + ஜானாதி: இந்த கூட்டலில், இடையில் க விகுதி சேர்வதால்தான் க்ஷேத்ரஞ்ய என்ற சொல் கிடைக்கிறது.

'க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி' (ஸ்ரீமத் பகவத் கீதை 13.2)
ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:
க்ஷேத்ரஞ்யன் நானே என்றுணர்.

க்ஷேத்ராணி ஹி சரீராணி பீஜம் சாபி சுபாசுபம் |
தானி வேத்தி யோகாத்மா தத: க்ஷேத்ரஞ்ய உச்யதே ||' (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 351.6)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
இந்த உடலே 'க்ஷேத்ரம்' என்று அழைக்கப்படுகிறது (இங்கு, உடலை நிலம் என்றும் பொருள் கொள்ளலாம்). நற்செயல் மற்றும் தீச்செயல்கள் இதன் விதைகளாகும். யோகத்தில் நிலைபெற்ற ஆத்மா இதனை உள்ளபடி அறிகிறான், எனவே, அவன் "க்ஷேத்ரஞன்" என்று அறியப்படுகிறான்.

17. ஓம் அக்ஷராய நம:
ஸ ஏவ ந எவர்க்கு இல்லை க்ஷரதி அழிவு (அல்லது தேய்வு) இதி அவர் அக்ஷர: அக்ஷர: என்று அழைக்கப்படுகிறார் பரமாத்மா அந்த பரமாத்மா |

எவருக்கு, 'க்ஷரம்' அதாவது அழிவு (அல்லது தேய்வு) இல்லையோ, அந்த பரமாத்மா "அக்ஷர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஷ்னாதேர் "அஷ்" என்ற சொல்லுடன் அஷ்னோதேர் வா அல்லது, "அஷு" என்ற சொல்லுடன் ஸரப்ரத்யய "ஸர" என்ற விகுதி அந்தஸ்ய கடைசியில் சேர்வதன் மூலம் ரூபமஷர இதி "அக்ஷர" என்ற சொல் பிறக்கிறது | 

ஏவகாராத் இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் "ஏவ" என்ற சொல் க்ஷேத்ரஞ்யாக்ஷரயோரபேத: க்ஷேத்ரஞன் (பொது வழக்கில் க்ஷேத்ரஞன் என்றால் ஜீவாத்மாவைக் குறிக்கும்) மற்றும் அக்ஷர (பரமாத்மா) இவற்றுள் வேறுபாடுகள் இல்லை என்ற பரமார்த்தத: மிக உயர்ந்த அத்வைத உண்மையைக் குறிக்கிறது.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

சகாராத்வ்யாவஹாரிகோ இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் "சகாரம்" பொது வழக்கில் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே உள்ள பேதஸ்ச வேறுபாடுகளைக் குறிக்கிறது, ப்ரஸித்தேர் பொதுவழக்கில் பிரபலமாய் இருப்பதால் மட்டுமே அப்ரமாணத்வாத் இது ஆதாரமான உண்மையாகிவிடாது ||
இங்கு சங்கர பகவத்பாதர் "ஏவ ச" என்ற சொற்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிற்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்தாலும், முடிவில் அத்வைதமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்று குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக