ஞாயிறு, மே 06, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 45

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஶ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.


ஸர்வான்யேதானி நாமானி பரஸ்ய ப்ரஹ்மனோSநக | (ஸ்ரீ விஶ்ணு தர்மம் 1.123.13)
ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
ஒ தூய்மையானவரே!!! இந்த அனைத்துத் நாமங்களும் பரப்ரஹ்மத்தின் திருநாமங்களே ஆகும்.

யம் யம் காமமபித்யாயேத்தம் தமாப்னோத்யஸம்யம் |
ஸர்வகாமானவாப்னோதி ஸமாராத்ய ஜகத்குரும் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)
ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
ஒரு அடியவர், எந்தெந்தப் பொருளை அடைய விழைகிறாரோ, ஐயமின்றி அப்பொருளையே அடைகிறார். அந்த உலகிற்கு குருவான (பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) வழிபடுவதன் மூலம் (அடியவரது) அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன.

தன்மயத்வேன கோவிந்தமேத்யேதத் தால்ப்ய நான்யதா |
தன்மயோ வாஞ்சிதான் காமான் யதவாப்னோதி மானவ: || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)
ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
ஒ தால்ப்யரே!!! (பரமாத்மா) ஸ்ரீ கோவிந்தருடன் ஐக்கியமடைந்து, அவர் மயமாக மாறுவதன் மூலமே ஒருவரால் அவரை அடையமுடியும். எவரொருவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறாரோ அவரால் அனைத்துப் பொருட்களையும் அடையமுடியும். இதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இல்லை.

இதி விஶ்ணுதர்மே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது,

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |
ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)
ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

இதி பகவத்கீதாயாம் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது,

அஹம் ஹரி: ஸர்வமிதம் ஜனார்தனோ நான்யத்தத: காரணகார்யஜாதம் |
ஈத்ருங் மனோ யஸ்ய ந தஸ்ய பூயோ பவோத்பவா த்வந்த்வகதா பவந்தி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.22.87)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
“நானே ஸ்ரீ ஹரியாவேன். இந்த உலகனைத்தும் பகவான் ஜனார்தனரே!! அந்த பரமாத்மாவைத் தவிர்த்து இங்கு எதுவும் செயலோ, காரணமோ இல்லை”. இவ்வாறான அறிவு படைத்தவரை பிறப்பு, இறப்பினால் உண்டாகும் இருமைகள் என்ற நோய் பற்றுவதில்லை.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது,

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |
கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோSன்யத ||
தஸ்மாத் ப்ரஹ்மைவாசார்யஸ்வரூபேணாவதிஷ்டே ||
(ஸ்ரீ விஶ்ணு தர்மம் 3.233.92)
ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
எங்கு குருவின் (ஆசார்யரின்) நிந்தை மற்றும் அவமதிப்பு நிகழ்கிறதோ அங்கு நமது காதுகளை மூடிக்கொள்ளவேண்டும். அல்லது, அங்கிருந்து வெகு தொலைவு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அங்கு ப்ரஹ்மமே குருவின் (ஆசார்யரின்) வடிவில் இருக்கிறது.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது,

வரம் ஹுதவஹஜ்வாலாபுஞ்சஸ்யாந்தர்வ்யவஸ்திதி: |
ந செளரிசிந்தாவிமுகஜனஸம்வாஸவைஷஸம் ||
எங்கு பகவான் ஸ்ரீ ஹரியை நினைக்காத மக்கள் உள்ளனரோ, அங்கு வசிப்பதைக் காட்டிலும், கொழுந்து விட்டெரியும் தீயின் சுடர்களுக்குள் வசிப்பது மேலானதாகும்.
இதி காத்யாயனவசனாத் ‘யத்ர தேஶே வாஸுதேவநிந்தா தத்ர வாசோ ந கர்தவ்ய: | இந்த காத்யாயனரின் வாக்கின் மூலம், எங்கெங்கெல்லாம் பகவான் ஸ்ரீ வாசுதேவரின் நிந்தனை நடக்கிறதோ, அங்கெங்கெல்லாம் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாந்தே மஹாத்மன: ||
எவர் பகவானிடத்திலும், (அந்த பகவானிடம் பக்தி புரிவது போன்றே) தனது குருவினிடத்திலும் பக்தி உடையவரோ, அவருக்கே மேற்கூறிய அர்த்தங்கள் அனைத்தும் தெளிவாகப் புரியும்.

இதி ஶ்வேதாஶ்வதரோபநின்மந்த்ரவர்ணாத் ஹரௌ குரௌ ச பரா பக்தி: கார்யேதி | இந்த ஶ்வேதாஶ்வதரோபநிஶத் வாக்கியத்தின் மூலம், பகவான் ஸ்ரீ ஹரியினிடத்திலும், அந்த பகவானுக்கு சமமாக குருவினிடத்திலும் பக்தி கொள்ளுதல் வேண்டும் (என்று புலனாகிறது).

அவஶேனாபி யன்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |
புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||
எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.

கலிகல்மமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |
ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத் க்ருஷ்ணஸ்ய ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரை      ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மதை: க்ருதம் |
பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||
எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் எரிக்கப்படுகின்றன.

சேயம் வதனவல்மீகவாஸினி ரசனோரகீ |
யா ந கோவிந்த கோவிந்த கோவிந்தேதி ப்ரபாதே ||
எவரது நாக்கு 'கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!' என்று கூறுவதில்லையோ அந்த நாக்கு வாயென்னும் புற்றுக்குள் வாழும் பாம்பாகும்.

பாபவல்லி முகே தஸ்ய ஜிஹ்வாரூபேன திஷ்டதி |
யா ந வக்தி திவா ராத்ரௌ குணான் கோவிந்தம்பவான் ||
எந்த நாக்கு பகலும், இரவும் பகவான் ஸ்ரீ கோவிந்தரின் குணங்களைப் போற்றப்பாடவில்லையோ, அது (அந்த) மனிதனின் வாயினுள் நாக்கின் வடிவத்தில் இருக்கும் பாவக்குவியலாகும்.

ஸக்ருதுச்சரிதம் யேன ஹரிரித்யக்ஷரத்வயம் |
பத்த: பரிகரஸ்தேன மோக்ஷாய கமனம் ப்ரதி ||
எவரொருவர் ஒருமுறையேனும் "ஹரி" என்ற இந்த இரு அக்ஷரங்களை (எழுத்துக்களை) உச்சரிக்கின்றாரோ அவர் மோக்ஷத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஶ்வமேதாவப்ருதேன துல்ய: |
தசாஶ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||
(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)
மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

ஏவமாதிவசனை: ஶ்ரத்தாபக்த்யோரபாவேSபி நாமஸங்கீர்த்தனம் மஸ்தம் துரிதம் நாசயதீத்யுக்தம் கிமுத ஶ்ராத்தாதிபூர்வகம் ஸஹஸ்ரநாமஸங்கீர்த்தனம் நாசயதீதி |
மேற்கண்ட (இதிஹாஸ, புராண) வாக்கியங்களிலிருந்து ஈடுபாடு மற்றும் பக்தி இன்றி செய்யப்படும் நாம சங்கீர்த்தனமே அனைத்துப் பாவங்களையும் ஒழித்துவிடும் என்று புலனாகிறது. எனில், ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் கூறப்படும் சஹஸ்ரநாமசங்கீர்த்தனம் அவற்றை (அந்தப் பாபக்குவியல்களை) அழித்துவிடும் என்று கூறவும் வேண்டுமா?

மனஸா வா அக்ரே ங்கல்ப்யத்யத வாசா வ்யாஹரதி
முதலில் மனதிற்குள் முடிவெடுக்கிறார். பின்னர் வாக்கினால் (அதையே) பேசுகிறார்
யத்தி மனஸா த்யாயதி தத்வாசா வததி
மனம் எதை நினைக்கின்றதோ, வாக்கு அதையே பேசுகின்றது

இதி ஸ்ருதிப்யாம் ஸ்மரணம் த்யானம் ச நாமங்கீர்த்தனேSந்தர்பூதம் |
மேற்கண்ட இந்த இரு வேதவாக்கியங்களால் (மனதால்) நினைத்தல், மற்றும் த்யானித்தல் ஆகிய இரண்டும் நாம சங்கீர்த்தனத்திற்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

யஸ்மின்ன்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே
விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக: |
முக்திம் சேதஸி ய: ஸ்திதோSமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:
கிம் சித்தம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.56)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரிடம் தங்கள் மனதை லயித்தவர்களுக்கு, நரகவாசம் இல்லையோ, சுவர்க்கத்தைப் பற்றிய நினைவுகளும் (அவர்களது முக்திப்பாதைக்குத்) தடைக்கற்களோ, அந்த ப்ரஹ்மாவின் ஸத்யலோகமும் துச்சமானதோ, எந்த அழிவற்றக் கடவுளானவர் தனது அடியவர்களின் தூய்மையான மனதிற்குள் வசித்து அவர்களுக்கு முக்தியை அளிப்பவரோ, அந்த பகவான் ஸ்ரீ அச்யுதரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பாவங்கள் அழிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? (முக்தியையே அளிக்க வல்லவரால் பாவங்களை அழிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை).

இதி விஶ்ணுபுராணாந்தே ஸ்ரீபராரேணோபஸம்ஹ்ருதம் |
இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுபுராணத்தின் முடிவில் ஸ்ரீபராசர மஹரிஷி (அந்தப் புராணத்தின் மூலக்கருத்தாக) முடிவுரையாகக் கூறுகிறார்.

ஆலோட்ய ர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா ||
ஸ்ரீ மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது:
அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கடைந்தெடுத்து, அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில் பகவான் ஸ்ரீமன் நாராயணரையே த்யானிக்க வேண்டும் என்பதே (அனைத்து சாஸ்திரங்களின் முடிவான கருத்தாகப்) புலனாகும்.

இதி ஸ்ரீமஹாபாரதாந்தே பகவதா ஸ்ரீவேதவ்யாஸேண உப ஸம்ஹ்ருதம் |
இவ்வாறு ஸ்ரீமஹாபாரதத்தின் முடிவில் ஸ்ரீவேதவ்யாஸர் கூறுகிறார்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வஸம்ஸ்திதை: |
ஒமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேவம் || (ஹரிவம்ம் 3.89.9)
ஸ்ரீஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது:
நீங்கள் அனைவரும் ஸத்வ குணத்தில் நிலைநின்று, எப்பொழுதும் பகவான் ஸ்ரீ ஹரியையே த்யானியுங்கள். ஒ அந்தணர்களே!!! 'ஓம்' என்று உச்சரித்து, பகவான் ஸ்ரீ கேசவரைத் த்யானிப்பீர்களாக.

கைலாசயாத்ராயாம் ஹரிரேகோ த்யாதவ்ய இத்யுக்தம் மகேஸ்வரேணாபி |
இவ்வாறு ஸ்ரீஹரிவம்சம் கைலாச யாத்திரை பகுதியில் பகவான் சிவனும் 'பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரையே த்யானிக்க வேண்டும்' என்று கூறுகிறார்.

ஏதத்ஸர்வமபிப்ரேத்ய 'ஏஷ மே ர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:' இத்யாதிக்யமுக்தம் |
இந்த வாக்கியங்களில் இருந்து "அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் கருதுகிறேன்" என்பதே (என்னும் பீஷ்மரின் கருத்தே) அனைத்திலும் மேலானதாக கூறப்படுகிறது.

'கிமேகம் தைவதம் லோகே' இத்யாரப்ய 'கிம் ஜபன் முச்யதே ஜந்து:' இதி ட்ப்ரஶ்னேஶு 'யத: ர்வாணி' இதி ப்ரஶ்னோத்தராப்யாம் யத்ப்ரஹ்மோக்தம் தத்விஶ்ப்தேனோச்யத இதி வ்யாக்யாதம் |
'உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?' என்று தொடங்கி 'யாரை நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும்' வரைக் (யுதிஷ்டிரனால்) கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு விடையாக 'எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ' என்று (பீஷ்மாசார்யார்) எந்த ப்ரஹ்மத்தை பற்றி விவரித்தாரோ அந்த ப்ரஹ்மமே 'விஶ்வம்' என்ற திருநாமத்தினால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு முறை ஆதிசங்கர பகவத்பாதாள் "விஶ்வம்" என்ற முதல் திருநாமத்திற்கு அளித்த உரைகளை பார்ப்போம்:

1. ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம |
(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


2. யத்வா பரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம் பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. அதவா விஶதீதி விஶ்வம் ப்ரஹ்ம |
அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

4. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம் ப்ரஹ்ம |
பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

5. ததா ஹி ஸகலம் ஜகத் கார்யபூதமே விஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |
மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக